
நடிகர் விமல் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘தேசிங்கு ராஜா’. இந்த திரைப்படத்தை ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எழில் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கதாநாயகனுக்கு ஜோடியாக நடிகை பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி ஜானரில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படத்தின் தொடர்ச்சியாக தேசிங்கு ராஜா பாகம் 2 எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தைப் போலவே இந்த பாகமும் நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இந்த பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். நடிகை ஜனா முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ராம்சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொன்னடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா பண்டாலமுரி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்க்ஸ்லி, மதுரை முத்து, சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவிமரியா, வையாபுரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் இந்த படத்தை தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் வித்யாசாகர் படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் எழிலுடன் இணைந்து வித்யாசாகர் பணியாற்றி உள்ளார்.
இந்த படம் நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. விமல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர தயாராகி உள்ளார். முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் நகைச்சுவை காட்சிகள் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ‘பிடாரி கோவில் தோப்பு’ என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வித்யாசாகர் இசையில் இந்த பாடல் கிராமிய மணத்துடன் வெளியானது. இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
முதல் பாகம் போலவே ‘தேசிங்கு ராஜா 2’ திரைப்படமும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமல் மற்றும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம் புகழ் ஆகியோரின் நகைச்சுவை கூட்டணி இந்த படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.