Vijay Babu Case : பாலியல் புகாரை வாபஸ் பெற ஒரு கோடி பேரம்... விஜய் பாபு மீது நடிகை பகீர் புகார்

By Asianet Tamil cinema  |  First Published Jun 20, 2022, 1:25 PM IST

Vijay Babu Case : விஜய் பாபு மீது பாலியல் புகார் தெரிவித்து வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது அவர் மீது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.


மலையாள திரையுலகில் நடிராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் பாபு. இவர் மீது புதுமுக நடிகை ஒருவர் அண்மையில் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்தார். அதன்படி விஜய் பாபு தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரை அடுத்து சில நாட்கள் தலைமறைவாக இருந்த நடிகர் விஜய் பாபு, அண்மையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார், அப்போது நடிகையின் சம்மதத்துடன் தான் எல்லாம் நடந்தது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய்பாபு. இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு தான் ஒரு நிரபராதி என நிரூபிப்பேன் என அவர் தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில், விஜய் பாபு மீது வழக்கு தொடர்ந்த நடிகை தற்போது மேலும் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதன்படி விஜய் பாபு தரப்பில் இருந்து அவரது நண்பர் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு கூறினார். நான் முடியாது என மறுத்தேன். உடனே ஒரு கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசினார். 

நான் அவரிடம் முடியவே முடியாது என உறுதியாக சொல்லிவிட்டேன். இதையடுத்து தான் அவர் போனை கட் செய்தார் என அந்த நடிகை கூறியிருக்கிறார். நடிகர் விஜய் பாபு பேரம் பேசிய விவகாரம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நெட்டிசன்கள் அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படியுங்கள்... Suriya 41 : சூர்யா - பாலா படத்தின் பாடல் காட்சி இணையத்தில் லீக் ஆனதா?... வைரல் வீடியோவின் பின்னணி இதுதான்

click me!