அடுத்தது ஆயிரத்தில் ஒருவன் 2-ம் பாகமா? புதுப்பேட்டை 2-ம் பாகமா?... சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட செல்வராகவன்

By Asianet Tamil cinema  |  First Published Jun 20, 2022, 7:37 AM IST

Selvaraghavan : ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2-ம் பாகத்தையும், புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகத்தையும் இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருந்தார் செல்வராகவன்.


தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என பல்வேறு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய இவர் தற்போது தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இயக்குனர் செல்வராகவனும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதுதவிர ஆயிரத்தில் ஒருவன் படத்தின் 2-ம் பாகத்தையும், புதுப்பேட்டை படத்தின் 2-ம் பாகத்தையும் இயக்க உள்ளதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவித்திருந்தார் செல்வராகவன். அந்த அறிவிப்புக்கு பின் அப்படங்கள் குறித்த எந்தவித அப்டேட்டையும் அவர் வெளியிடவில்லை. இதனால் அந்த படம் எடுக்கப்படுமா என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் அந்த இரண்டு படங்கள் குறித்தும் பேசியுள்ளார் செல்வராகவன். அதன்படி ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என தெரிவித்துள்ள அவர், முதலில் புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்.... Jailer movie : ரஜினி - நெல்சன் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் பட கதை லீக்கானது?

click me!