Kamalhaasan : கமல் சொன்ன டைம் டிராவல் கதை கேட்டு மெர்சலாகிட்டேன் - அயலான் இயக்குனரின் நெகிழ்ச்சி பதிவு

By Asianet Tamil cinemaFirst Published Jun 19, 2022, 11:48 AM IST
Highlights

Kamalhaasan : இன்று நேற்று நாளை, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார், நடிகர் கமல்ஹாசனை அண்மையில் சந்தித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ந் தேதி வெளியானது. ரிலீசானது முதல் அரங்கம் நிறைந்த காட்சிகளாக சக்கைப்போடு போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் இதுவரை ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து திக்குமுக்காடிப் போன கமல், அண்மையில், அப்படத்தை வெளியிட்ட தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள் என அனைவரையும் அழைத்து தடபுடலாக விருந்து கொடுத்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தனது அன்படி வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று நேற்று நாளை, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார், நடிகர் கமல்ஹாசனை அண்மையில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “நான் வியந்து பார்த்த ஆளுமை அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டராவல்  பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ரவிக்குமார்.

இதையும் படியுங்கள்... Rachitha Mahalakshmi : இரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் சீரியல் நடிகை ரச்சிதா... மாப்ள யார் தெரியுமா?

click me!