பல் வலிக்காக சிகிச்சைக்கு போன நடிகை.. பலூன் போல் வீங்கிய முகத்துடன் திரும்பி வந்த சோகம் - என்ன நடந்தது?

Published : Jun 19, 2022, 09:22 AM ISTUpdated : Jun 19, 2022, 09:23 AM IST
பல் வலிக்காக சிகிச்சைக்கு போன நடிகை.. பலூன் போல் வீங்கிய முகத்துடன் திரும்பி வந்த சோகம் - என்ன நடந்தது?

சுருக்கம்

Swathi sathish : நடிகை சுவாதியின் முகம் பலூன் போல் வீங்கி, அவர் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கர்நாடாகவைச் சேர்ந்த நடிகை சுவாதி சதீஷ், எஃப்.ஐ.ஆர்., 6 டூ 6 போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாகவும் இருந்து வருகிறார் சுவாதி. இந்நிலையில் இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் பல் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க திட்டமிட்ட சுவாதி, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பல் வேரை அகற்றினால் சரியாகிவிடும் எனக்கூறி அதற்காக சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சிகிச்சைக்கு பின்னர் அவரது முக அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு அதிக அளவு வீங்கியுள்ளது. இதனால் பதற்றமடைந்த சுவாதி, இது குறித்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

மருத்துவர்களோ இந்த வீக்கம் சில நாட்களில் அதுவாகவே சரியாகிவிடும் எனக் கூறியுள்ளார். ஆனால் 3 வாரங்கள் ஆகியும் சுவாதிக்கு முகத்தில் வீக்கம் குறையவில்லை. தற்போது முகவீக்கத்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள நடிகை சுவாதி, இதற்கு மருத்துவமனை தரப்பில் இருந்து சரியான விளக்கமளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை சுவாதியின் முகம் பலூன் போல் வீங்கி, அவர் கோர தோற்றத்துடன் காட்சியளிப்பதை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... நான் தப்பா பேசல... தப்பா புரிஞ்சுகிட்டாங்க - சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்த சாய் பல்லவி - வைரலாகும் வீடியோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!