மீண்டும் தந்தையான நடிகர் நகுல்...குழந்தைகள் புகைப்படத்தை பகிர்ந்த தம்பதிகள்!

Kanmani P   | Asianet News
Published : Jun 18, 2022, 08:19 PM ISTUpdated : Jun 18, 2022, 08:21 PM IST
மீண்டும் தந்தையான நடிகர் நகுல்...குழந்தைகள் புகைப்படத்தை பகிர்ந்த தம்பதிகள்!

சுருக்கம்

பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகர் நகுல் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இது குறித்த செய்தியை குழந்தைகளுடன் வீடியோவாக பகிர்ந்துள்ளார் நகுல் மனைவி..

நடிகரும், பின்னணிப் பாடகருமான நகுல், ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்தில் நாயகனின் நண்பனாக கொழுக் மொழுக்கென அறிமுகமான இவர் பின்னர் கட்டுடலாக மாறி  காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் மற்றும் தமிழுக்கு என் ஒன்று அழுதும் போன்ற படங்களில் நடித்தார். முன்னதாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் நகுல் நடித்துள்ள எரியும் கண்ணாடி திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதை அடுத்து  இயக்குனர் RG.கிருஷ்ணன் இயக்கத்தில் வாஸ்கோடகாமா திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் நகுல்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு தனது நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை மணந்தார். ஆகஸ்ட் 2020 இல் அவர்களின் மகள் அகிரா பிறந்தார்.. பின்னர் சமீபத்தில் இருவரும் தங்களது 6வது திருமண நாளையொட்டி அழகிய போட்டோஸை சமூக வலைதளங்கள் மூலம் இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறோம் என அறிவித்தனர். இதையடுத்து இன்ஸ்டாவில் அதிக பாலோவர்ஸை கொண்ட இந்த ​​​​அபிமான ஜோடி தங்கள் மகளுடன் சமீபத்திய கர்ப்பகால போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வந்தன.  இந்நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை பகிர்ந்துள்ளார் நகுல் மனைவி ஸ்ருதி.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவுடன் "அற்புதமான வாட்டர் பிரசவத்தின் மூலம் எங்கள் சிறு ஆண் குழந்தையை மீண்டும் வரவேற்கிறேன். எங்கள் தேவதை காட் டாக்டர் விஜயா கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. இன்னும் மிக யதார்த்தமாக உணர்கிறாள், அகிரா தனது சிறிய சகோதரனைப் பார்த்து பிரமிப்பில் இருக்கிறாள். அவள் அவனிடம் எப்போதும் மென்மையாக இருந்தாள்! என குறிப்பிட்டுள்ளார். இந்தத்தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!