Jailer movie : ஜெயிலர் பட போஸ்டரும் காப்பியா... ஆதாரத்துடன் நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

By Asianet Tamil cinemaFirst Published Jun 18, 2022, 3:12 PM IST
Highlights

Jailer movie : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அந்த போஸ்டர் தற்போது காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. 

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தை இயக்க நெல்சன் ஒப்பந்தமாகி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் ஐதராபாத்தில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, நேற்று வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தின் போஸ்டர் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த போஸ்டரில் ரத்தக் கறையுடன் ஒரு கத்தி தொங்குவது போன்றும் பின்னணியில் பாழடைந்த தொழிற்சாலை இருப்பது போன்றும் உள்ளது. அந்த பின்னணியில் உள்ள தொழிற்சாலையின் புகைப்படத்தை கூகுளில் இருந்து எடுத்து ஜெயிலர் படக்குழு பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளது.

அந்த தொழிற்சாலையின் ஒரிஜினல் போட்டோவை தேடிபிடித்த நெட்டிசன்கள், அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, போடோஷூட் கூட நடத்தாமல் இவ்வளவு அலட்சியமாகவா போஸ்டரை வெளியிடுவீர்கள் என இயக்குனர் நெல்சனை சாடி வருகின்றனர். நெல்சனின் இந்த செயல் ரஜினி ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... Ajith Bike Trip : BMW பைக்கில் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றும் அஜித்... வைரலாகும் AK-வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

click me!