விஜய் ஆண்டனி நடிப்பில்... வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் 'கொலை'..!

Published : Oct 16, 2021, 06:31 PM IST
விஜய் ஆண்டனி நடிப்பில்... வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் 'கொலை'..!

சுருக்கம்

'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது.

'கோடியில் ஒருவன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸுடன் இணைந்து மீண்டும் விஜய் ஆண்டனியுடன் கைகோர்க்கிறது. 'விடியும் முன்' புகழ் பாலாஜி கே குமார் இயக்கும் இந்த சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வரை கண்டிராத கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடிக்க உள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்: பணம் தான் முக்கியம்... பட வாய்ப்புகள் கிடைக்காததால் த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..!

’கொலை’ திரைப்படத்திற்காக லோட்டஸ் பிக்சர்ஸுடன் இன்ஃபினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் கைகோர்த்துள்ளது. 'விடியும் முன்' படத்தை இயக்க லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சென்னை திரும்பிய பாலாஜி கே குமார், அப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றதோடு, அவரது அடுத்து படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தினார். தற்போது அவர் ஒரு மிகவும் சுவாரஸ்யமான கதைக்களத்துடன் விஜய் ஆண்டனியுடன் களமிறங்கியுள்ளார். 'கொலை' திரைப்படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார் மற்றும் சம்கித் போஹ்ரா ‘கொலை’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மேலும் செய்திகள்: குழந்தை பிறந்தபின் கூடிய அழகு... வெள்ளை நிற சல்வாரில் தேவதை போல் மின்னும் நடிகை ஸ்ரேயா..!

'இறைவி, இறுதி சுற்று, கோலமாவு கோகிலா' மற்றும் 'விடியும் முன்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மெரினா மற்றும் நெற்றிக்கண் புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.கர்ணன், சர்பட்டா பரம்பரை மற்றும் பரியேறும் பெருமாள் புகழ் செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாள, கே ஆறுசாமி கலை இயக்கத்திற்கும், மகேஷ் மேத்யூ சண்டை காட்சிகளுக்கும் பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்:மனைவியை அடித்து கொடுமை படுத்திய பிக்பாஸ் அபிஷேக்..! முகத்திரையை கிழித்து தொங்கவிட்ட தீபா..!

படத்திற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் அதிகளவில் தேவைப்படுவதால், பணியை விரைந்து முடிக்க சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் ‘கொலை’ திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

29 The Film Review : மேயாத மான் மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா?
Trisha : வயசானாலும் குறையாத அழகு! த்ரிஷா-வின் 'ரிவர்ஸ் ஏஜிங்' ரகசியம்