
இயக்குனர் எ.எல்.விஜய் மற்றும் நடிகை அமலா பால் 'தலைவா 'படத்தின் படப்பிடிப்பு போது காதலில் விழுந்தனர்.
இவர்களது காதலுக்கு இருவர் வீட்டிலும் பச்சை கொடி காட்டியதை தொடர்ந்து, இவர்களது காதல் 2014 ஆண்டு திருமண பந்தத்தில் முடிந்தது.
திருமணத்திற்கு பிறகு இருவரும் இளம் காதல் ஜோடிகள் போல் அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து காதலை உறுதி படுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஒரு வருடம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள், ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக முடிவெடுத்தது பல தமிழ் திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால் ஏன் திருமண வாழ்வில் இருந்து விளக்குகிறோம் என எந்த ஒரு முழுமையான விளக்கமும் இருவர் தரப்பிலிருந்தும் இதுவரை தெரிவிக்க வில்லை.
தற்போது இவர்களுடைய விவாகரத்து வழக்கு இன்று குடும்ப நல நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாக தெரிவித்து இந்த வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது அமலாபால் தனுஷுடன் வட சென்னை, மாற்றும் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் . அதே போல் இயக்குனர் விஜயும் படம் இயக்குவதில் முழு கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.