
நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்துள்ள சம்பவம் தற்போது மலையாள திரையுலகில் காட்டு தீ போல் பற்றி எரிந்துவருகிறது.
இந்நிலையில் பாவனாவின் இந்த நிலைக்கு காரணம், பிரபல மலையாள நடிகர் திலீப் என கூறப்பட்டது. மேலும் பாவனாவை கடத்தியவர்களுக்கு திலீப் 30 லட்சம் பணம் கொடுத்துள்ளதாகவும். மலையாள பத்திரிகைகளில் வெளிவந்தது.
இப்படி திலீப் செய்ததற்கு காரணம் , காவ்யா மாதவனுடன் தொடர்பில் இருந்த திலீப்பை , மஞ்சு வாரியரிடம் தெரிவித்தது பாவனா தான், அதனால் தான் அவரை பழிவாங்க திலீப் இப்படி செய்தார் என என்றும் கூறப்பட்டது.
இதை அறிந்த திலீப் மிகவும் கோபமாக ‘கேரளாவில் இப்படி யொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. யாருக்கும் இப்படியொரு நிலை ஏற்படக்கூடாது.
இந்த விவகாரம் தொடர் பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அது சரியான கோணத்தில் செல்கிறது. போலீசாரின் விசாரணையை திசை திருப்பும் முயற்சிகளில் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் பாவனா தன்னுடைய நல்ல தோழி அவருக்கு இப்படி நடந்தது அதிர்ச்சியாக உள்ளது, எங்கும் இதுக்கும் ஏன் மீடியாக்கள் முடிச்சி போடுகிறார்கள் என உச்ச கட்ட கோபத்தில் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.