எங்க கல்யாணம் நல்லபடியா நடந்ததுக்கு காரணமே இவங்கதான் - அன்சீன் போட்டோ போட்டு அன்பை பொழிந்த விக்னேஷ் சிவன்

Published : Jun 20, 2022, 03:21 PM IST
எங்க கல்யாணம் நல்லபடியா நடந்ததுக்கு காரணமே இவங்கதான் - அன்சீன் போட்டோ போட்டு அன்பை பொழிந்த விக்னேஷ் சிவன்

சுருக்கம்

vignesh shivan : திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இவர்களால் தான் தங்களது கல்யாணம் நல்ல படியாக நடந்தது என குறிப்பிட்டுள்ளார். 

நடிகை நயன்தாரா தனது நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஜுன் 9-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, இதையடுத்து கேரளாவுக்கு சென்று அங்கு நயன்தாராவின் பெற்றோரிடம் ஆசிபெற்றனர். இதையடுத்து சில நாட்கள் அங்கு ஓய்வெடுத்துவிட்டு, தற்போது இருவரும் ஜாலியாக கனிமூம் சென்றுவிட்டனர்.

அவர்கள் இருவரும் தற்போது தாய்லாந்துக்கு ஜோடியாக ஹனிமூன் சென்றுள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கான வீடியோ உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருந்ததால், இந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் புகைப்படம் எடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவ்வப்போது அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் விக்கி.

அந்த வகையில் தற்போது திருமணத்தில் எடுத்த குரூப் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், இவர்களால் தான் தங்களது கல்யாணம் நல்ல படியாக நடந்தது என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பது அவர்களது திருமண ஏற்பாட்டாளர்கள். எங்கள் திருமணத்தை ஆண்டாண்டுக்கும் நினைவுகூறத்தக்க ஒன்றாக மாற்றியதற்கு நன்றி என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

இதையும் படியுங்கள்... இந்த பைக் ட்ரிப் வெறும் டிரைலர் தான்... இனி தான் ரியல் சம்பவமே இருக்கு - அஜித் போட்ட அல்டிமேட் பிளான்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!