ஹீரோ ஆனாலே இப்படித்தான்... சூரி செய்த வேலையை பார்த்து மெர்சலான ரசிகர்கள்

விடுதலை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சூரியின் சாகச வீடியோ வைரலாகி வருகிறது.


தமிழ் திரையுலகில் காமெடியனாக கலக்கியவர் சூரி. இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ரிலீஸ் ஆன விடுதலை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தில் குமரேசன் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. வழக்கமாக உள்ள ஹீரோ இமேஜை ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படத்தில் சீரியஸான ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் சூரி. இப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூரிக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறது. அதன்படி தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் சூரி, அடுத்ததாக கொட்டுக்காளி என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார். கூழாங்கல் படத்தை இயக்கிய பி.எஸ்.வினோத்ராஜ் தான் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்துவிட்டது.

Latest Videos

இதையும் படியுங்கள்... காட்டுப்பசியில் இருக்கும் சிம்புவுக்கு கிடைத்த இரட்டை வேடம்... மீண்டும் மன்மதன் மோடுக்கு செல்லும் எஸ்.டி.ஆர்

இதுதவிர இயக்குனர் அமீர் இயக்கத்தில் ஒரு படத்திலும், எதிர்நீச்சல் பட இயக்குனர் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நாயகனாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் சூரி. அந்த படங்களின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கின்றன. இவ்வாறு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூரி, தற்போது இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு - இவற்றை பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி pic.twitter.com/ZWR5YCecFA

— Actor Soori (@sooriofficial)

அங்குள்ள பிரபலமான சிப் லைனில் சாகச பயணம் மேற்கொண்டுள்ளார் சூரி. அதில் போஸ் கொடுத்தபடி நடிகர் சூரி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள சூரி, “உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு - இவற்றை பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி” என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹீரோ ஆனாலே இப்படித்தான் சாகசமெல்லாம் பண்ணுவாங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... காதலியை கரம்பிடித்தார் எருமைசாணி விஜய்... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

click me!