பெண்ணுடனான முத்தக் காட்சி என்ன..? லெஸ்பியனாக நடிக்கவும் தயார்! வித்யாபாலன் தந்த அதிர்ச்சி!

First Published Oct 8, 2017, 12:43 PM IST
Highlights
vidhyabalan acting lesbian


நடிகை வித்யா பாலன் ஹிந்தியில் நடித்த படம் கஹானி. இது தமிழில் நயன்தாரா நடிப்பில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் தயாரானது. அண்மையில், இந்த கஹானி பாகம் 2 படத்தில் நடித்தார் வித்யா பாலன். இந்தப் படத்தில் அடக்க ஒடுக்கமான சேலை கட்டிய கதாபாத்திரம் என்பதால், மிகவும் பாந்தமாக நடித்தார். ஆனால், அது ரசிகர்களிடம் பெரிதாக எடுபடவில்லை. எனவே, கவர்ச்சிக்கு மாறிவிடலாம் என்ற நினைப்பில் பேச ஆரம்பித்திருக்கிறார் வித்யா பாலன். 

அண்மையில் ரசிகர்களின் கேள்விகளைக் கேட்க, அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமான நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதில் பேசியபோது, ரசிகர் ஒருவர் நக்கலாக, “நீங்கள் நடிகர்களுடன் முத்தக் காட்சிகளில் நடித்திருக்கிறீர்கள். அப்படி, மற்றொரு ஹீரோயினுடன் நடிக்கும்போது அந்த நடிகைக்கும் முத்தம் கொடுத்து நடிப்பீர்களா?” என்று கேட்டார். 

ஆனால், அந்தக் கேள்வியை ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொண்ட வித்யாபாலன், “முத்தம் என்ன முத்தம்? கதைக்கு தேவைப்பட்டால் லெஸ்பியன் (பெண்ணொடு பெண் உறவு கொள்ளும்) கதாபாத்திரத்தில் நடிக்கக்கூட நான் தயங்க மாட்டேன். அதில் ஒன்றும் எனக்குப் பிரச்னை இல்லை” என்று பதிலளித்தார். 

அவரது பதிலைக் கேட்டதும், இந்தக் கேள்வியைக் கேட்ட ரசிகர் மட்டுமல்ல,  நிகழ்ச்சியில் இருந்தவர்களும் கூட தலைசுத்தித்தான் போனார்களாம்!

click me!