Ajith Video: பார்த்தாலே அல்லு விடுது.. விடாமுயற்சி படப்பிடிப்பில் தலைகுப்புற கவிழ்ந்த அஜித்தின் கார்! வீடியோ!

Published : Apr 04, 2024, 02:33 PM ISTUpdated : Apr 05, 2024, 11:35 AM IST
Ajith Video: பார்த்தாலே அல்லு விடுது.. விடாமுயற்சி படப்பிடிப்பில் தலைகுப்புற கவிழ்ந்த அஜித்தின் கார்! வீடியோ!

சுருக்கம்

'விடாமுயற்சி' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை, அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

தமிழ் சினிமாவில், படு மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். தற்போது  இவர், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம் குறித்த அப்டேட் அடுத்தடுத்து வெளியாக துவங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா நெஞ்சை உறைய வைக்கும் கார் சேசிங் காட்சி ஒன்றில் அஜித் டூப் போடாமல்  நடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் கைகளை கட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு, அஜித் காரில் செல்லும் போது... அஜித் செல்லும் கார் தலைகுப்புற கவிழ்கிறது. இந்த காட்சியில் அஜித் நடித்து முடித்ததும் இயக்குனர் ஓகே என சொல்லியவுடன்.... காரில் உள்ள அஜித் மற்றும் ஆரவ் ஆகிய இருவரையும் மீட்க படக்குழுவினர் பதறியடித்து கொண்டு ஓடுகிறார்கள். இந்த காட்சியில் அஜித் எவ்வித டூப்பில் போடாமல் நடித்து மெர்சல் செய்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வரும் இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் அஜித் இப்படத்திற்காக எடுத்துள்ள ரிஸ்க்கையும் கண் முன் காட்டியுள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில், 'விடாமுயற்சி' படம் முடிவுக்கு வந்துவிடும் என கூறப்படும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து அஜித், இயக்குனர் ஆதிக் ரவி சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் நடிகர் அஜித் மீண்டும் பைக் ரைடிங் செய்ய ஆர்வம் காட்டுவார் என தெரிகிறது. அண்மையில் கூட அஜித் பைக் ரைடிங் சென்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதில் அஜித் தன்னுடைய பைக் ரைடிங்கில் ஈடுபட்ட சக நண்பர்களுக்கு, பிரியாணி செய்து கொடுத்து அசத்தினார். இந்த பைக் ட்ரிப்பின் போது விடாமுயற்சி பட வில்லன் ஆரவ்வும் அஜித்துடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார்த்திக்-ரேவதி உறவை முடிவுக்குக் கொண்டு வர... பஞ்சாயத்தைக் கூட்டிய சாமுண்டீஸ்வரி: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ