பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அசுரன் பட வசனம் பேசியது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1339 மாணவ, மாணவிகள் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி, அவர்களுடனும், அவர்களது பெற்றோருடனும் நடிகர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடிகர் விஜய் தடபுடலாக நடத்திய இந்த விழா தான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. இதில் விஜய் பேசுகையில், இந்த விழா நடத்துவதற்கு முக்கிய காரணம், சமீபத்துல ஒரு படத்துல ஒரு அழகான டயலாக் ஒன்னு பார்த்தேன். “காடு இருந்த எடுத்துக்குவானுங்க, ரூபா இருந்த புடுங்கிப்பானுங்க, படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது” அது ரொம்ப பாதிச்ச வசனமா இருந்தது.
இதையும் படியுங்கள்... படிப்பது மட்டும் முழுமையான கல்வி இல்லை! குட்டி ஸ்டோரி மூலம் இரண்டு விஷயங்களை கூறிய தளபதி விஜய்!
இது நூத்துக்கு நூறு உண்மை மட்டுமில்ல இதுதான் யதார்த்தமும் கூட. அப்படியொரு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்விக்கு என் பக்கத்தில் இருந்து ஏதாவது செய்யனும்ணு ரொம்ப நாளான யோசிச்சிட்டே இருந்தேன். அதற்கான விழா தான் இது என பேசி இருந்தார். அவர் அசுரன் பட டயலாக்கை குறிப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இயக்குனர் வெற்றிமாறனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பட்டது.
இதற்கு அவர் பதிலளித்து பேசியதாவது : “சினிமாவுல நாம சொல்ற ஒரு விஷயம், சமூகத்தில் ஆளுமைமிக்க ஒருவரை அது சென்றடையும் போது, அதனுடைய நேர்மறையான தாக்கம் என்ன என்பதை இதன் மூலம் பார்க்க முடிகிறது. அந்த மேடையில் அவர் சொன்னபடி, நம்ம நம்மளுடைய வரலாறை தெரிஞ்சிக்கனும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகியோருடன் அண்ணாவை பற்றியும் படிக்க வேண்டும் என நான் சொல்லுவேன்” என்று வெற்றிமாறன் பேசியுள்ளார்.
இதையும் படியுங்கள்... நண்பா, நண்பிகளுக்காக விஜய் என்னென்ன செஞ்சிருக்காரு பாருங்க... தளபதியின் கியூட் மொமண்ட்ஸ் இதோ