கொரோனாவால் பறிபோனா மற்றொரு நடிகர் உயிர்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்..!

Published : May 08, 2021, 10:41 AM IST
கொரோனாவால் பறிபோனா மற்றொரு நடிகர் உயிர்..! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்..!

சுருக்கம்

சமீப காலமாக கொரோனாவினால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் பழம்பெரும் நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சமீப காலமாக கொரோனாவினால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்றால் பழம்பெரும் நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: உச்சகட்ட கவர்ச்சி... முதல் முறையாக ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா!
 

திரைபிரபலங்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என அனைவரையும் வாட்டி வதக்கி வரும் கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். சில எதிர்பாராத மரண சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் பாதிக்க பட்டு, இயக்குனர் தாமிரா, இயக்குனர் கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஆட்டோகிராப் பிரபலம் கோமகன் ஆகியோர் உயிரிழந்தனர். 

இவர்களை தொடர்ந்து தற்போது பழம்பெரும் நடிகர் திலக் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சிவாஜி கணேசனுடன்  மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’கல்தூண்’.  படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பதால் இவரது பெயர் கல்தூண் திலக் என்று மாறிவிட்டது. மேலும் 'ஆறிலிருந்து அறுபது வரை', 'தாயில்லாக் குழந்தை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் திடீர் திருப்பம்... அதிரடியாக என்ட்ரியாகும் புதிய நடிகை.! புகைப்படம் இதோ...
 

நடிகர் என்பதை தாண்டி, சில படங்களில் உதவி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் திலக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மதுரையில் இருந்து சிம்புவின் அரசன் மாநாட்டை தொடங்கும் வெற்றிமாறன்: எப்போது ஸ்டார்ட் தெரியுமா?
எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!