தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில்... முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து..!

Published : May 07, 2021, 04:33 PM IST
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில்... முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து..!

சுருக்கம்

இன்று தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  

இன்று தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது...  "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்" எனக்கூறி, பதவியேற்றபோது, பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்பேன், என தங்களின் நல்லெண்ணம் தமிழக மக்களால் உணரப்பட்டது. நேற்று தாங்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்த அரசியல் கட்சி தலைவர்கள் நல்லகண்ணு, சங்கரையா ,ஆர்.எம்.வீரப்பன், ஆகியோர்களை நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று சந்தித்து வாழ்த்து பெற்றதும், இதே மே 7-ஆம் தேதி 1967 அன்று திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள், தான் பதவியேற்பதற்கு முன்பாக பெரியார் அவர்களை நேரடியாக சென்று வாழ்த்து பெற்றதை நினைவு கூறத் தோன்றுகிறது.

அதேபோன்று தங்களின் புதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தோழமை கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல், விஜயகாந்த், வைகோ, தொல் திருமாவளவன், என அனைத்து அரசியல் தலைவர்களை நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று சந்தித்தது "பெரியோரை மதிப்போம் என்ற தமிழர் பண்பாட்டின் வழி நடப்போம்" என்பதை பறைசாற்றுகிறது.

மதுரவாயலில் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய திமுக தொண்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை என்பது நேர்மையான சட்டத்தின் ஆட்சி தொடக்கம். திமுக பெண் தொண்டர் ஒருவர் காணிக்கை என்ற பெயரில் அவரது நாக்கை அறுத்துக் கொண்ட பொது, உடலை வருத்தி கொள்வது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இது போன்று யாரும் உடலை வருத்திக்கொண்டு எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தாதீர்கள் என்பது, பகுத்தறிவு ஆட்சியின் தொடக்கம் தொடக்கம்.

நல்ல தொடக்கம்...  சிறந்த சேவையை தொடர்ந்து தந்து பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கருணாநிதி, ஆகியோரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்க, தமிழக மக்களுக்கும் நல்லதொரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். 

மேலும் எங்கள் துறையின் அமைச்சராக பொறுப்பேற்ற மாண்புமிகு திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கு திரைத்துறையின் சார்பிலும் மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்