'பருத்திவீரன்' பட பிரபலம்... பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்..! நடிகர் கார்த்தி இரங்கல்..!

By manimegalai aFirst Published May 7, 2021, 2:55 PM IST
Highlights

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார். அவருக்கு சமூக வலைதளத்தில், கார்த்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
 

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான 'பருத்திவீரன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார். அவருக்கு சமூக வலைதளத்தில், கார்த்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்? இக்கட்டில் மாட்டி விட்ட இயக்குனர்!
 

நடிகர் கார்த்தியின் திரையுலக வாழ்க்கையில், முதல் படமான 'பருத்தி வீரன்' படத்தில்.... தன்னுடைய இயல்பான நடிப்பால் ஒட்டு மொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தார். வெளிநாடு சென்று, பட்ட படிப்பு படித்து வந்த கார்த்தி, கசங்கிய சட்டை, பட்டப்பட்டி தெரிய கட்டிக்கொண்டிருந்த கைலி என, தன்னுடைய கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நடித்திருந்தார். கார்த்தியின் முதல் படமா? என அனைவரையும் ஆச்சரிப்பட செய்தது இவரது நடிப்பு.

மேலும் இந்த படத்தில் நடித்ததற்காக நடிகை ப்ரியா மணிக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதே போல்... சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, பஞ்சவர்ணம் பாட்டி என அனைவரும் தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றனர். 

மேலும் செய்திகள்: கோலிவுட் திரையுலகை ஆட்டி படைக்கும் கொரோனா... இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு தொற்று உறுதி!
 

இந்நிலையில், இந்த படத்தில்... கார்த்தியின் பாட்டியாக நடித்த பஞ்சவர்ணம் பாட்டி... சமீப காலமாக வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், காலமானார். இவரது மரணம் குறித்து நடிகர் கார்த்தி, தன்னுடைய சமூக வலைத்தளத்தில்... "பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பலர் இவரது குடும்பத்தினருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

click me!