கொரோனாவால் பறிபோன பிரபல நடிகரின் தங்கை கணவர் உயிர்..! பாதுகாப்பாக இருங்கள்... உருக்கமான பதிவு..!

Published : May 07, 2021, 10:44 AM IST
கொரோனாவால் பறிபோன பிரபல நடிகரின் தங்கை கணவர் உயிர்..! பாதுகாப்பாக இருங்கள்... உருக்கமான பதிவு..!

சுருக்கம்

 பிரபல நடிகர் பாண்டு, மற்றும் ஆட்டோகிராப் படத்தின் பிரபலம் கோமகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் பிரபல இளம் காமெடி நடிகர்களில் ஒருவரான பால சரவணன், அவருடைய தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளத்தி பதிவிட்டுள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதையும் கொரோனா வைரஸ், ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்தியாவில்  ஒரு நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கொரோனாவில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து செல்ல வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் நண்பகல் 12 மணிக்கு மேல், இன்று முதல் ஊடரங்கு அமலுக்கு வருகிறது. அவசியம் இல்லாமல் வெளியே செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்டுடம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சில பிரபலங்கள், அதில் இருந்து மீண்டாலும்... எதிர்பாராத விதமாக சில மரண நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. 

அந்த வகையில் நேற்று மட்டும், பிரபல நடிகர் பாண்டு, மற்றும் ஆட்டோகிராப் படத்தின் பிரபலம் கோமகன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் பிரபல இளம் காமெடி நடிகர்களில் ஒருவரான பால சரவணன், அவருடைய தங்கையின் கணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளத்தி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்... நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்... என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த பதிவு பார்வர்கள் நெஞ்சங்களையே உருக்கும் விதத்தில் உள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் கைது.. போலீசை எதிர்த்து கேள்வி கேட்டதால் நடவடிக்கை..!