முடித்தே தீரவேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி நிற்கிறது... முதல்வர் பதவி ஏற்ற ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

By manimegalai aFirst Published May 7, 2021, 11:22 AM IST
Highlights

மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்றாரது. இதற்க்கு பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
 

மு.க.ஸ்டாலின் தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்றாரது. இதற்க்கு பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா, அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 தொகுதியில் பெரும்பான்மையோடு தன்னுடைய வெற்றியை நிறுவூபித்து ஆட்சியமைக்கிறது. இதை தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஸ்டாலின் உட்பட 34 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்... அதில் அவர் கூறியுள்ளதாவது... 

"முடியுமா நம்மால்? என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்... முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்...

'முடித்தே தீர வேண்டிய' பல காரியங்கள் வரிசைகட்டி முன் நிற்க சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மக்களின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வாசிப்பதற்கு உயிர்க்காற்று கூட கிடைக்காமல் மக்கள் அல்லல்படும் இந்த பேரிடர் காலத்தில், நீங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தங்கள் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி அடையும் என்று நம்புகிறோம். தங்களுக்கும், ஆற்றலும் அனுபவம் நிறைந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

தமிழகத்தின் உரிமைகளை மீட்க தமிழர்களின் ஒருமித்த குரலாக இனி உங்கள் குரல் ஒலிக்கட்டும் என்று நடிகர் சூர்யா இன்று முதலமைச்சர் பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோல் இவரது தந்தை சிவகுமார் "தமிழில் படித்தால் வேலை என்ற நிலையை உருவாக்கவும்" என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை ஒன்றோடு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் செந்தில், இன்று தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்றிருக்கும் உயர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும் .தமிழகம் முன்னேறட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் பல பிரபலங்கள் தொடர்ந்து இன்று முதலமைச்சர் பதவியை ஏற்கும் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!