
கொரோனா 2வது அலை தன்னுடைய கோரமுகத்தை காட்டி வரும் நிலையில், மீண்டும் தன்னால் முடிந்த அளவிற்கு உதவிகளை செய்ய துவங்கியுள்ளார் சோனு சூட். அந்த வகையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கு ஆச்சிஜன் வேண்டும் என, சமூக வலைத்தளத்தில், உதவி கேட்க மின்னல் வேகத்தில் உதவியுள்ளார்.
மேலும் செய்திகள்: 'பருத்திவீரன்' பட பிரபலம்... பஞ்சவர்ணம் பாட்டி காலமானார்..! நடிகர் கார்த்தி இரங்கல்..!
கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனாவை கட்டு படுத்த திடீர் என லாக்டவுன் போடப்பட்டது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி பட்டனர். அவர்களுக்கு பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை தொடர்ந்து செய்து ரியல் நாயகன் என நிரூபித்து வருகிறார் சோனு சூட்.
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களிலும், போன் மூலமும் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக இந்த கொரோனா காலத்தில், கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும், வெண்டிலேட்டர், ஆச்சிஜன், மற்றும் மருத்துவ உதவிகள் பலவற்றை தன்னுடைய சொந்த பணத்தை செலவு செய்து, எவ்வித பிரதிபலனும் பாராமல் செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்: அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஸ்ருதிஹாசன்? இக்கட்டில் மாட்டி விட்ட இயக்குனர்!
அந்த வகையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீர்ர் சுரேஷ் ரெய்னா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 65 வயதாகும் தன்னுடைய அத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு உடனடியாக ஆச்சிஜன் வேண்டும் என கேட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த சோனு சூட், 10 நிமிடத்தில் உங்கள் உறவினர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமைக்கு ஆச்சிஜன் வரும் என கூறி பதில் அளித்தார்.
மேலும் செய்திகள்: கோலிவுட் திரையுலகை ஆட்டி படைக்கும் கொரோனா... இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் அவரது மனைவிக்கு தொற்று உறுதி!
சோனு சூட் சொன்னது போலவே, அந்த மருத்துவமனைக்கு 10 நிமிடத்தில்... ஆச்சிஜன் சிலிண்டர்கள் வந்து இறங்கியுள்ளது. இதை தொடர்ந்து, இந்த மிகப்பெரிய உதவிக்கு நன்றி தெரிவித்து சுரேஷ் ரெய்னா தன்னுடைய நன்றியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பலர், சோனு சூட்... மின்னல் வேகத்தில் விரைந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரரின் உறவினருக்கு உதவியதற்கு அவரை பாராட்டி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.