கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... 'தளபதி 65 ' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

Published : May 07, 2021, 05:16 PM IST
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... 'தளபதி 65 ' படக்குழு எடுத்த அதிரடி முடிவு..!

சுருக்கம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில் , இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் தற்போது 'தளபதி 65 ' ஆவது படத்தில் நடித்து வருகிறார்.  விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதற்காக விஜய் தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றிய கையேடு அன்று இரவே விமானத்தில் ஜார்ஜியா பறந்தார். சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜிவாவில் நடந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.

குறிப்பாக படப்பிடிப்பு முடித்து விட்டு வந்த, ஒரு சில தினங்களில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை  சில நாட்கள் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எனவே கொரோனா பாதிப்பு சற்று தணிந்த பிறகே இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடந்து வரும் 'டான்' , சூர்யா நடித்து வரும் 'வாடி வாசல்' ஆகிய படங்களின் படப்பிடிப்பு கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்க பட்டுள்ள நிலையில்.... தளபதி விஜய்யின் படமும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ