Ganesh : "ஷமிதா என் மருமகள் இல்ல.. என் மகள்" - மகன் ஸ்ரீகுமாரை கண்கலங்க வைத்த மூத்த இசையமைப்பாளர் கணேஷ்!

By Ansgar R  |  First Published Apr 11, 2024, 3:56 PM IST

Musician Ganesh : தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத இசை இரட்டையர்கள் தான் சங்கர் மற்றும் கணேஷ். இவர்களது இசையில் பல சிறப்பான பாடல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் திரையுலகில் கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் தனது இசை பயணத்தை மேற்கொண்டு வரும் ஒரு மிகச்சிறந்த இசையமைப்பாளர் தான் கணேஷ். இசை இரட்டைவர்களாக திகழ்ந்த சங்கர் மற்றும் கணேஷ், பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றி, அதன் பிறகு திரைப்படங்களுக்கு இசையமைக்க தொடங்கினர். 

கடந்த 1986 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் கணேஷ் வீட்டிற்கு வந்த ஒரு பார்சலில், வெடிகுண்டு இருந்தது. அது வெடித்ததில் அவருடைய கைகள் மற்றும் கண்கள் பெரிய அளவில் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல 1991ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அந்த விழா மேடையின் அருகில் தான் கணேஷ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

Kichcha : சூப்பர் ஸ்டார் கிச்சா வீட்டில் நச்சுனு ஒரு விருந்து - காதல் கணவருடன் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார்!

இந்நிலையில் அவருடைய மகன் ஸ்ரீகுமார் தற்பொழுது சின்னத்திரை நாடகங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல ஸ்ரீகுமாரின் மனைவியும், நடிகையுமான ஷமிதாவும் தற்பொழுது நாடகங்களில் நடித்து வருகின்றனர். ஷமிதா மற்றும் ஸ்ரீகுமாருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற சமித்தாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் அவரது மாமனாரும், இசையமைப்பாளருமான கணேஷ் அவர்கள் பேசிய ஒரு ஆடியோ அவருக்கு ககாட்டப்பட்டது. அவருக்கு போட்டு காண்பிக்கப்பட்டது. "அதில் தான் ஒரு நடிகை என்பதை மறந்து, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தனது வேலை என்று நினைத்து செய்பவள் தான் என் மருமகள் ஷமிதா".

"என் மகன் ஸ்ரீக்கு கிடைத்தது அவன் செய்த வரம், எங்கள் குடும்பம் செய்த பாக்கியம். அவளை நான் மருமகள் என்று பேச்சுக்குத்தான் சொல்கிறேனே தவிர, அவள் என் மகள், அப்படித்தான் அவளும் என்னை நடத்தி வருகிறாள். என்னையும் என் மகனையும் என் குடும்பத்தாரையும் மிகச் சிறப்பாக கவனித்துக்கொள்கிறாள்", என்று கூற இதை அருகில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ஸ்ரீ மற்றும் நடிகை ஷமிதா ஆகியோர் கண்கலங்கி நின்றனர்.

அதகளமான புத்தம் புது திரைப்படங்கள்... டிவியில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் என்னென்ன? முழு விவரம் இதோ

click me!