திருத்தணி முருகன் கோவிலில் நடிகையும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான ரோஜா சாமி தரிசனம் செய்தபோது தமிழக பக்தர்கள் காத்திருந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில் நடிகையும் அமைச்சருமான ரோஜா சாமி தரிசனம் செய்தார். இவர்களுடன் வந்தவர்களுக்கு இலவச தரிசனத்திற்கு திருக்கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது. தமிழக பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் இல்லை என்று கூறிவிட்டு ஆந்திராவில் இருந்து வரும் இவர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசனத்திற்கு திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதிக்கலாமா என்று முருக பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை தினம் என்பதால் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை செய்யப்பட்டது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், என தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் மாடவீதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இலவச தரிசனம் மற்றும் நூறு ரூபாய் கட்டண வழி தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருத்திகை தினத்தை முன்னிட்டு நடிகையும் அமைச்சரமான ரோஜா மற்றும் மற்றொரு ஆந்திரா அமைச்சரமான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெத்த ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி இருவரும் இன்று நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டார். பின்னர் அவர்களுக்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்... GOAT movie : ரஜினியுடன் மோதல் இல்லை... சிங்கம் போல் சிங்கிளாக திரைக்கு வருகிறது கோட் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆந்திர மாநில அமைச்சருடன் இரண்டு அமைச்சர்களும் வந்ததால் இவர்களுடன் இருபதுக்கு மேற்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு வழியில் அழைத்துச் சென்று திருக்கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து பிரசாதங்கள் வழங்கினார்கள். தமிழகத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு வழி தரிசனம் இல்லை என்று கூறும் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம், ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் இரண்டு அமைச்சர்களுடன் வந்தவர்களுக்கு 20 பேருக்கு சிறப்பு தரிசனத்திற்கு எப்படி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கிறது தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு ஒரு நியாயம் ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்களுக்கு சிறப்பு நியாயம் வழங்கப்படுகிறதா என்று முருக பக்தர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்..?
திருத்தணி முருகன் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்தார் pic.twitter.com/5Gkcjd2YD3
— Asianetnews Tamil (@AsianetNewsTM)திருத்தணி நகராட்சி திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுகவை சேர்ந்தவர்கள் இன்று ஆந்திர மாநிலம் அமைச்சரை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் சிறப்பு தரிசனம் மேற்கொள்வதற்கு முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி அளிக்கிறது. ஆனால் தமிழக பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்கு இல்லை என்று கடும் வெயிலில் நிற்பதற்கும் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி செல்வதற்கும் தமிழக பக்தர்களை திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் வஞ்சிப்பதாக பக்தர்கள் சாடி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... Romeo Review : ரொமான்ஸில் விஜய் ஆண்டனி பாஸ் ஆனாரா? இல்லையா? ரோமியோ படத்தின் விமர்சனம் இதோ