ஆடுஜீவிதம் படத்தில் ஹக்கீம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கே.ஆர்.கோகுல், இந்த படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ஆடுஜீவிதம் படம் கடந்த மாதம் வெளியானதில் இருந்தே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ஹக்கீம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கே.ஆர்.கோகுல், இந்த படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து இந்தியா டுடே சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய அவர். ஹக்கீம் கேரக்டருக்கு முக்கு உடல் எடையை குறைக்க நான் மேற்கொண்ட அனைத்து சோதனைகளும் அந்த கதாபாத்திரத்தை யதார்த்தமாக நடிக்க உதவியது. அது என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதித்தது.
நான் தண்ணீர் மட்டுமே குடித்து வந்தேன், பின்னர் படிப்படியாக உடல் எடையை குறைத்தேன். 15 நாட்கள் நான் பட்டினி கிடந்தேன், வெறும் பிளாக் காபி மட்டுமே குடித்தேன். ஆனால் நான் மூன்றாம் நாளே மயக்கம் போட்டு விழுந்தேன். என் குடும்பத்தாரும் நண்பர்களும்தான் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இது உண்மையில் என் மன ஆரோக்கியத்தை பாதித்தது." என்று தெரிவித்தார்.
undefined
Suriya Salary : கங்குவா படத்திற்கு குறைவான சம்பளம் வாங்கிய சூர்யா.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
மேலும் படத்தில் பிருத்விராஜுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்ட கே.ஆர். கோகுல் “ படப்பிடிப்பில் நான் மிகவும் இளையவன், எல்லோரும் என்னை தங்கள் சகோதரனாகவும் மகனாகவும் கருதினார்கள். அந்த வகையான வளர்ப்பு மற்றும் கவனிப்பு எப்போதும் செட்டில் வசதியாக இருக்க எனக்கு உதவியது. நீங்கள் வசதியாக இருக்கும்போது நீங்கள் சுதந்திரமாக வேலை செய்யலாம். பிருத்விராஜ் என்னை ஒரு புதுமுக நடிகராக அல்லாமல், ஒரு சக நடிகராக நடத்தினார், . 'என்னைப் போலவே நீங்களும் அதே வேலையைச் செய்கிறீர்கள்' என்று அவர் என்னிடம் கூறினார், ”என்று கூறினார்.
2088-ம் ஆண்டு பென்யாமின் எழுதிய ஆடு ஜீவிதம் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன், கே.ஆர். கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்லும் நிலையில், அங்கு பாலைவனத்தில் ஆடுகளுடன் வாழ நேரிடுகிறது. அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்கள் அதிலிருந்து தப்பி நஜீப் மீண்டும் நாடு திரும்பினார் என்பதே படத்தின் கதை.
Samantha : "அந்த அப்பாவி நாக சைதன்யாவை ஏன் ஏமாத்துனீங்க? சமந்தா கொடுத்த தரமான பதிலடி..
ஆடு ஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்பும் அவரின் கடின உழைப்பும் பாராட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 30 கிலோ வரை உடல் எடையை குறைத்த பிருத்விராஜ் தனது அசாதாரண நடிப்பின் மூலம் நஜீப்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். ஏ.ஆர் ரஹ்மானின் இசை இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் உழைப்புக்கு பின் கடந்த 29-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்ச்ககர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த படம் இதுவரை ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.