பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி.. கொச்சியில் நேற்று காலமானார் - சோகத்தில் திரையுலகம்!

By Ansgar R  |  First Published Dec 1, 2023, 11:00 AM IST

Actress R Subbalakshmi is no more : மலையாள மொழி மட்டுமல்லாமல் தளபதியின் பீஸ்ட் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஆர். சுப்பலட்சுமி நேற்று இரவு கொச்சியில் காலமானார். அவருக்கு வயது 87.


கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகை ஆர். சுப்பலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் தங்கள் இரங்கல்களை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்து வருகின்றனர். சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல், அவர் ஒரு சிறந்த படகியாகவும் திகழ்ந்து வந்துள்ளார். 

சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளரான இவர், பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் நடித்த நந்தனம் படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 66 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கல்யாணராமன், ராப்பகல், திலகம், சிஐடி மூசா, பாண்டிப்படா, ராணி பத்மினி மற்றும் பல வெற்றிப்படங்களில் அவர் நடித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

அதே போல மலையாளம் மட்டும் இல்லாமல் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில், பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் அவர். அதே போல இறுதியாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் அவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிறுவயதிலிருந்தே கலைகளில் தீவிரமாக ஆர்வம் கொண்டிருந்த அவர், அகில இந்திய வானொலியில் (AIR) பணியாற்றி, அங்கிருந்து ஓய்வு பெற்ற பிறகு திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். 2002ம் ஆண்டு வெளியான ஒரு விளம்பர படம் தான் அவர் நந்தனம் திரைப்படத்தில் இணைய அவருக்கு வாய்ப்பளித்தது என்றே கூறலாம். 

மினிமம் 1000 கோடி வசூல்.. அது தான் டார்கெட் - பக்காவா பிளான் போட்டு களமிறங்கும் ஐந்து தென்னிந்திய படங்கள்!

நந்தனம் படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் அதிக அளவில் வரத்தொடங்கின, ஹிந்தி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாட்டியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். சுப்பலட்சுமி தொலைக்காட்சி நடிகராகவும் இருந்தார், தூர்தர்ஷன் உட்பட பல சேனல்களில் அவர் சீரியல்களில் தோன்றியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!