Actor Prashanth : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் டாப் ஸ்டார் பிரஷாந்த். அவரது தந்தை இயக்குனர் தியாகராஜன், ஒரு புதிய காரை தன் மகனுக்கு பரிசளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தல, தளபதி என்கின்ற அந்த போட்டி நிலவுவதற்கு முன்பே "டாப் ஸ்டார்" என்ற படத்தோடு, மிக பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் பிரசாந்த். 1990வது ஆண்டு வெளியான "வைகாசி பொறந்தாச்சு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நாயகனாக தமிழில் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமானார். அந்த படத்தை இயக்கியது ராதா பாரதி என்ற அறிமுக இயக்குனர்.
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான "கல்லூரி வாசல்" என்கின்ற திரைப்படத்தில் Pony Tailளுடன் தோன்றிய பிரசாந்திற்கு அந்த காலகட்டத்திலேயே பெண் ரசிகர்கள் பெரிய அளவில் இருந்தனர். தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் நல்ல பல படங்களை கொடுத்து வந்த அவருக்கு 2006ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது.
undefined
2006ம் ஆண்டுக்கு பிறகு இந்த 2024 ஆம் வரை உள்ள 18 ஆண்டுகள், 5 திரைப்படங்களில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை தியாகராஜன் அவர்கள் ஒரு மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனது மகனின் 51வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் அவருக்கு ஒரு புத்தம் புது bmw காரை பரிசளித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 3000 சிசி சிலிண்டர் கொண்ட இந்த கார் நான்கு வால்வ் மைல்டு ஹைபிரிட் என்ஜினை கொண்டது. சுமார் 375 பி.ஹெச்.பி சக்தியையும், 520 mm டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரு நடமாடும் ரதம் என்றே சொல்லலாம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் 11 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் திறன் கொண்ட இந்த வண்டி, ஒரு முறை முழுமையாக டேங்க் நிரப்பப்பட்டால், சுமார் 900 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கும்,
முற்றிலும் ஆட்டோமேட்டிக் மயமான இந்த வண்டி 8 கியர் அம்சம் கொண்ட வண்டி ஆகும். தற்பொழுது இந்திய சந்தையில் இந்த வண்டியின் மதிப்பு சுமார் 1.30 கோடி, ஆனால் ஆர்டர் செய்து, கையில் வண்டி வரும்போது எப்படியும் 1.6 கோடி வரை செலவாகிவிடும்.