Tamil New Year Movies : எல்லா வருடங்களை போலவே இந்த தமிழ் வருடப்பிறப்புக்கும் பல லேட்டஸ்ட் சூப்பர் ஹிட் படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் "பகவந்த் கேசரி". தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக விளங்கிவரும் பாலையா இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். வேகம் குறையாத அவருடைய நடிப்பு மொழிகள் தாண்டி அனைத்து கமர்சியல் திரைப்பட ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காலை 9.30 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி உலக அளவில் வெளியான திரைப்படம் தான் "மாமன்னன்". இதுவரை வடிவேலுவை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து மிகப்பெரிய பாராட்டை பெற்றார் மாரி செல்வராஜ். ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான மாமன்னன் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருட பிறப்பிற்கு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
"பொன் ஒன்று கண்டேன்", செந்தில் வீராசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் தற்பொழுது நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதன்படி ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் வருட பிறப்பு அன்று கலர்ஸ் டிவியில் மதியம் 2 மணிக்கு இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
"வடக்குப்பட்டி ராமசாமி", சந்தானம் நடிப்பில் இந்த 2024 ஆம் ஆண்டில் வெளியான படம் தான் இது. கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் 1 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
இயக்குனர் ஆர். ரவிக்குமாரின் சுமார் 6 ஆண்டுகால உழைப்பின் வெளிப்பாடு தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "அயலான்" திரைப்படம். இந்த திரைப்படம் இவ்வாண்டு துவக்கத்தில் வெளியானது. குழந்தைகள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.