யார் சொல்லுக்கும் வளையாத மக்கள் திலகம்.. R.M வீரப்பனின் பேச்சுக்கு அடிபணிவர் - அதை உணர்த்தும் ஓர் நிகழ்வு!

By Ansgar R  |  First Published Apr 9, 2024, 4:24 PM IST

Saroja Devi : மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களோடு அதிக அளவிலான படங்களில் இணைந்து நடித்த இரு பெரும் நடிகைகள் தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும், கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவி அவர்களும் தான்.


MGR மற்றும் சரோஜாதேவி ஆகியோர் தென்னிந்திய சினிமாவில் மறக்கமுடியாத "On Screen" ஜோடிகளில் சிறந்தவர்களாவர். பல சூப்பர்ஹிட்களை ஒன்றாகக் கொடுத்துள்ளனர் ஜோடி. கன்னடத்து பைங்கிளி என்று செல்லமாக ரசிகர்களால் அறியப்பட்டவர் தான் சரோஜா தேவி. இருப்பினும், வெளியான சில அறிக்கைகளின்படி, அவரது வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நிலையை சந்தித்துள்ளார் அவர், எம்.ஜி.ஆர் அவர்களுடன் நடிக்க ஒப்பந்தமான ஒரு படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். 

MGRம், சரோஜாதேவியும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக திகழ்ந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. "தாய் சொல்லைத் தட்டாதே", "தாயை காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "தர்மம் தலைகாக்கும்" மற்றும் "நீதி பின் பாசம்" போன்ற 26 வெற்றி திரைப்படங்களில் இவர்கள் இருவரும் நடித்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

சுயமரியாதை இயக்கம் முதல் நாடகமேடை வரை... படிப்படியாக வளர்ந்த ஆர்.எம்.வீரப்பனின் குடும்பப் பின்னணி!

ஆனால் கடந்த 1964ம் ஆண்டு வெளியான மக்கள் திகளத்தின் "வேட்டைக்காரன்" படத்திற்காக சரோஜாதேவியின் தாயாரிடம், அப்படத்தின் தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் கால் சீட் புக் செய்ய சென்றுள்ளார். ஆனால் சரோஜாதேவியின் தாய், தேவரிடம் சம்பளத்தை உயர்த்திக் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் கோபமுற்ற தயாரிப்பாளர் சின்னப்பா தேவர், சரோஜா தேவியை நீக்கிவிட்டு அந்த படத்தில் பிரபல நடிகை நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களை நடிக்கவைத்துள்ளார். அந்த காலகட்டத்தில், தன் படங்களில் கதையின் நாயகிகளை MGR தான் தேர்வு செய்வாராம், ஆனால் அவருடைய முடிவை கூட மீறிய இரு தயாரிப்பாளர்கள் உண்டென்றால் அவர்கள் சின்னப்பா தேவர் மற்றும் இன்று மறைந்த தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் மட்டும் தான் என்று கூறப்படுகிறது.

கன்னட திரையுலகின் முதல் பெண் சூப்பர்ஸ்டாராக சரோஜா தேவி கருதப்படுகிறார். மகாகவி காளிதாசா என்ற கன்னட படத்தின் மூலம் திரைப்படங்களில் அறிமுகமானார் அவர். நடிகர்கள் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோருடன் அவர் நடித்த பல வெற்றிப் படங்கள் காலம் கடந்த நிற்கிறது என்றே கூறலாம். 

சிவாஜியுடன், தங்கமலை ராகசியம், சபாஷ் மீனா, எங்கள் குடும்பம் பெருசு, பாக பிரிவினை மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் திலகத்துடன் 22 படங்களில் அவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும், என்.டி.ராமராவுடன் சீதாராம கல்யாணம், ஜகதேகா வீருணி கதா மற்றும் தாகுடு மூதாலு போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் சரோஜா தேவி.

அதே போல பாலிவுட்டில் பைகா, ஓபரா ஹவுஸ், சசுரல் மற்றும் பியார் கியா தோ தர்னா கியா போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கடைசியாக 1967ல் வெளியான "அரச கட்டளை" திரைப்படத்தில் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு ஜோடியாக நடித்தார். எம்.ஜி. சக்கரபாணி இயக்கத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி கதாநாயகிகளாக நடித்த சரித்திரப் படம் அது.

R.M.Veerappan: எம்ஜிஆர் நடித்த தெய்வ தாய் முதல் ரஜினியின் பாட்ஷா வரை! பல படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன்!

click me!