Lokesh : "அச்சம் தவிர் முதல் தலைவர் 171 வரை" - தனக்கென தனி ரசிகர் கூட்டம் - கெத்தாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ்!

Ansgar R |  
Published : Apr 09, 2024, 03:21 PM IST
Lokesh : "அச்சம் தவிர் முதல் தலைவர் 171 வரை" - தனக்கென தனி ரசிகர் கூட்டம் - கெத்தாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ்!

சுருக்கம்

Lokesh Kanagaraj : தற்கால கோலிவுட் சினிமா வரலாற்றில் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் ஒரு இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் என்றால் அது மிகையல்ல.

சினிமா பின்புலம் என்பதே இல்லாமல் ஒரு சுயம்புவாக தனது திறமையின் மூலம் தமிழ் திரை உலகில் கொடிகட்டி பறக்கும் எத்தனையோ முன்னணி கலைஞர்களின் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ். குறும்படங்களின் மூலம் தனது பயணத்தை துவங்கி, அதில் பற்பல வெற்றிகளை கண்டு, அதன்பிறகு மாநகரம் என்கின்ற திரைப்படத்தின் மூலம், தான் யார் என்பதை கோலிவுட் உலகிற்கு பறைசாற்றியவர் அவர். 

கடந்த 2012 ஆம் ஆண்டு "அச்சம் தவிர்" என்கின்ற குறும்படத்தின் மூலம் தான் பலரின் கவனத்தை லோகேஷ் கனகராஜ் ஈர்த்தார். குறும்படங்களுக்கு என்று நடத்தப்படும் விழாக்களில் பல விருதுகளை "அச்சம் தவிர்" திரைப்படம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகும் தொடர்ச்சியாக நல்ல பல குறும்படங்களை எடுத்து வந்த லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் மாநகரம். 

பிரியா பவானி ஷங்கர் முதல் லாஸ்லியா வரை.. செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக மாறியவர்கள் யார் யார் தெரியுமா?

அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் "கைதி" என்கின்ற திரைப்படத்தை இயக்கி மீண்டும் வெற்றி கண்டார். அதன் பிறகு இவருடைய இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்த "மாஸ்டர்" என்கின்ற திரைப்படம் அவரை உச்ச நட்சத்திரமாக மாற்றிய நிலையில், தனது கனவு நாயகனான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து "விக்ரம்" என்கின்ற மாபெரும் கமர்சியல் ஹிட் திரைப்படத்தை கொடுத்தார். 

அதன் பிறகு வெளியான "லியோ" திரைப்படத்தின் வெற்றி உலக அளவில் அனைவரும் அறிந்ததே. இன்றளவும் கேரள உலகில் பல கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படமாக "லியோ" திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல வெற்றி புகைப்படங்களை கொடுத்த அவர் இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து தரமான படமொன்றை இயக்கி வருகின்றார். 

Maharaja : சம்மர் ரேஸில் இணைந்த மக்கள் செல்வன்.. "மகாராஜா" படம் எப்போ ரிலீஸ் ஆகும்? - வெளியான VJ 50 அப்டேட்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!