பழம்பெரும் நடிகை ஜெயந்தி காலமானார்..!

By manimegalai aFirst Published Jul 26, 2021, 10:38 AM IST
Highlights

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி, கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை ஜெயந்தி, கடந்த சில வருடங்களாகவே ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஜெயந்தி, தென்னிந்திய மொழிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தேசிய விருதையும் பெற்றுள்ளார் . 1960 மற்றும் 70 களில் வெள்ளித்திரையில் மிகவும் பிஸியான நாயகியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இப்படி பல மொழிகளில் நடித்திருந்தாலும் கன்னட திரையுலகில் தான் அதிக கவனம் செலுத்தினார். 7 முறை கன்னடா ஸ்டேட் அவார்ட் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புகழ்பெற்ற நடிகர்களான எம்.ஜி.ஆர், நாகேஷ் ,ஜெமினி கணேசன், ராஜ் குமார், என்.டி.ஆர் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் 'எதிர்நீச்சல்', 'இரு கோடுகள்', 'பாமா விஜயம்', 'வெள்ளி விழா' போன்ற படங்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.

இந்நிலையில் 76 வயதாகும் ஜெயந்தி, ஆஸ்துமா பிரச்சனைக்காக பல சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்து விட்டதால் இவரது குடும்பத்தினர் தெரிவித்ததை தொடர்ந்து திரையுலகினர் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.  

click me!