பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jun 27, 2021, 4:41 PM IST

தற்போது பழம் பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் பெருச்சோகத்தை உருவாக்கி வருகிறது. தற்போது பழம் பெரும் நடிகையான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட ராஜேஸ்வரி, நாடக மேடைகள் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர். 1000க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

“ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிறவளாச்சே” என்ற பழமொழி வார்த்தையைக் காந்திமதியை அர்ச்சித்து ’16 வயதினிலே’ படத்தில் வரும் ஒற்றை வசனம் மூலமாக இன்று அந்த படத்தை பார்த்தாலும் ரசிகர்களை ஈர்க்க வைக்கும். கவர்ச்சி வில்லன் கே.கண்ணனின் ‘கண்ணும் இமையும்’ நாடகத்தில் இவர் நடித்தபோது அதைப்பார்த்த இயக்குநர் ஜோசப் தளியத் ‘காதல் படுத்தும் பாடு’ படத்தில் ஒரு வாய்ப்பை இவருக்கு அளித்தார்.

16 வயதினிலே, மண் வாசனை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ‘எதிர் நீச்சல்’, மற்றும் கயல் படங்களிலும் நடித்துள்ளார். 95 வயதான ஜெமினி ராஜேஸ்வரி இன்று காலை மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருடைய மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

click me!