இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... காலில் விழுந்து ஆசி வாங்கிய மணமக்கள்... வீடியோ!

Published : Jun 27, 2021, 01:49 PM ISTUpdated : Jun 27, 2021, 01:50 PM IST
இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்... காலில் விழுந்து ஆசி வாங்கிய மணமக்கள்... வீடியோ!

சுருக்கம்

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமானஉதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநரான ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், தொழிலதிபரும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளருமான தாமோதரனின் மகன் ரோஹித்திற்கும் இன்று சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி திருமணம் நடைபெற்றது. 

சென்னை  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் காலை 11.15 மணிக்கு இயக்குநர் ஷங்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்திற்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. ணமகன், மணமகளின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் , நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். 

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமானஉதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். திருமணம் முடிந்ததும் இளம் தம்பதியான ஐஸ்வர்யா - ரோஹித் இருவரும் மணக்கோலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். மணமக்களை முதல்வர் மு.க.ஸ்டாலினும் மலர் தூவி ஆசி வழங்கினார். அதன் பின்னர் மணமக்கள் இருவருக்கும் திருமண பரிசாக மரக்கன்றுடன் கூடிய மலர் கூடையை அன்பளிப்பாக அளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணத்தில் பங்கேற்ற வீடியோ இதோ... 

"

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?