சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட ரிலீஸ் எப்போது? வெளியான புதிய அப்டேட்..!

Published : Jun 26, 2021, 07:11 PM IST
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' பட ரிலீஸ் எப்போது? வெளியான புதிய அப்டேட்..!

சுருக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், 'டாக்டர்' படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார்  இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது. 

ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு so  baby  பாடல் வெளியாகி மில்லியன்களில் வியூஸ்களை குவித்து லைக்குகளை பெற்று, பலரது ரிங் டோனாக மாறியுள்ளது.

'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் டாக்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. பின்னர் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்  தேர்தல் சமயம் என்பதால் அப்போது வெளியிடாமல் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.

ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி பரவியதை தொடர்ந்து, தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லை என அறிவித்த படக்குழு, 'டாக்டர்' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் முயற்சியில் இறங்கியது. ஆனால் ஓடிடியில் ரிலீஸ் செய்வதிலும் தற்போது சில பிரச்சனைகள் நிலவி வருவதால், மீனுடன் படத்தை திரையங்கிலேயே வெளியிடும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார்களாம்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால், 'டாக்டர்' படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?