அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் மின்னிய 'என்ஜாய் எஞ்சாமி' விளம்பம்..!

By manimegalai aFirst Published Jun 26, 2021, 6:42 PM IST
Highlights

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் 'இண்டிபென்டெண்ட் ஆல்பமாக' உருவான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் 'இண்டிபென்டெண்ட் ஆல்பமாக' உருவான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இந்த பாடல் சுமார் 250 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை செய்தது. 

'உசுரு நரம்புல’ இறுதிச்சுற்று, ‘கண்ணம்மா’ (காலா), ’ரவுடி பேபி’ (மாரி 2), ’காட்டுப்பயலே’ (சூரரைப்போற்று) உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ, இந்த பாடல் மூலமாக உலக அளவில் கவனம் பெற்றார் தீ. அதே போல் தெருக்குரல் அறிவுக்கும் தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் கிடைத்தது. இதை தொடர்ந்து இன்று காலை தெருக்குரல் அறிவு, முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியுள்ள ராப் பாடலான 'டோன்ட் டச் மீ ' பாடலும் இன்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இப்பாடலை  பிரெஞ்ச் ராப் இசைக் கலைஞர் டிஜே சினேக் என்பவர் ரீமேக் செய்து  உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உலக இசை தினம் கொண்டாடப்பட்ட நிலையில் டிஜே ஸ்நேக் மற்றும் பாடகி தீ ஆகியோர் இணைந்து என்ஜாய் எஞ்சாமி பாடல் ரீமிக்ஸ் உருவாக்கியுள்ளனர்.

இந்த பாடலின் விளம்பரம் தற்போது அமெரிக்காவிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் பாடல் ஒன்றின் விளம்பரம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது இந்த பாடலுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

click me!