Kanaka : "கனகாவை பார்த்ததும் அதிர்ச்சி.. அந்த சம்பவம் அவரை ரொம்ப பாதிச்சுருச்சு" - மனம் நொந்து பேசிய ராமராஜன்!

Ansgar R |  
Published : May 20, 2024, 05:06 PM IST
Kanaka : "கனகாவை பார்த்ததும் அதிர்ச்சி.. அந்த சம்பவம் அவரை ரொம்ப பாதிச்சுருச்சு" - மனம் நொந்து பேசிய ராமராஜன்!

சுருக்கம்

Actress Kanaka : கடந்த 1989ம் ஆண்டு பிரபல நடிகர் ராமராஜன் மற்றும் பிரபல நடிகை கனகா நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் என்ற திரைப்படம் தொடர்ச்சியாக 425 நாள்கள் ஓடி சாதனை படைத்த படம்.

தமிழ் சினிமாவில் மிக மூத்த நடிகையாக வலம் வந்த தேவிகாவின் மகள் தான் பிரபல நடிகை கனகா, சென்னையில் கடந்த 1973ம் ஆண்டு பிறந்த நடிகை கனகா தற்பொழுது சென்னையில் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். கலைத்துறையில் வெறும் 11 ஆண்டுகள் தான் பயணித்தார் என்றபொழுதும் கோலிவுட் உலகின் மிக மிக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அவர். 

அதிலும் குறிப்பாக கடந்த 1989ம் ஆண்டு கங்கை அமரனின் இயக்கத்தில், நடிகர் ராமராஜனுடன், கனகா இணைந்து நடித்த "கரகாட்டக்காரன்" என்கின்ற திரைப்படம் சுமார் 425 நாட்கள் ஓடி, மாபெரும் சாதனை படைத்தது. இதுதான் கனகாவின் முதல் திரைப்படம் என்று கூறினால் யாரும் அவ்வளவு எளிதில் நம்பி விடமாட்டார்கள். அந்த அளவுக்கு மிக நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.

அட்ராசக்க.. பிரபாஸின் 'கல்கி 2898 A.D' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! பட் இந்த ட்விஸ்டை எதிர்பார்களையே பாஸ்!

 

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அவருடைய தாய் தேவிகா இறந்த நிலையில் அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகினார். அதன் பிறகு எத்தனையோ இயக்குனர்கள் அவரை மீண்டும் திரைத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுத்தும் கூட அவர் நடிக்க வரவில்லை. 

இந்த சூழலில் தற்பொழுது மீண்டும் ஹீரோவாக களமிறங்கியிருக்கும் நடிகர் ராமராஜனிடம் கனகா குறித்து கேட்கப்பட்டது. நான் அண்மையில் ஒரு பட சூட்டிங்கில் பங்கேற்றுக் கொண்டிருந்தேன், அப்பொழுது ஒருவர் வந்து உங்களை பார்க்க கனகா வந்திருக்கிறார் என்று கூறினார். நானும் ஆர்வமாக சென்று அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் கனகா எங்கே என்று கேட்டேன். 

அவர் சிரித்துக் கொண்டே நான் தான் கனகா, அடையாளம் தெரியவில்லையா? என்று கேட்டார். மிகவும் வெயிட் போட்டு தலையில் சிவப்பு நிற டை அடித்து ஆளே மாறி நின்ற அவரை கண்டு நான் அதிர்ந்து போனேன். அதற்கு பிறகு என்னால் பேச முடியவில்லை.. அவருடைய தாயின் மரணம் தான் அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்று மனம் நொந்து பேசினார்.

Flashback : முத்தக்காட்சி.. மெய்மறந்த STR, த்ரிஷா.. GVM கட் சொல்லியும் நிறுத்தல - பயில்வான் சொன்ன "இச் தகவல்"!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்