
பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று நிமோனியா காரணமாக காலமானார். அவரின் மறைவுவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கும், அரசியலிலும் ஏற்பட்ட பேரிழப்பு என்று பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரஸ்ய தகவல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் 80-களில் ரஜினி, கமல் என்ற இரு ஜாம்பாவன்கள் உச்சத்தில் இருந்த போது அவர்களுக்க்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த பலர் உள்ளனர். குறிப்பாக விஜயகாந்த், மோகன், ராமராஜன், கார்த்திக், போன்ற நடிகர்களை உதாரணமாக சொல்லலாம். குறிப்பாக நடிகர் விஜயகாந்த் 80-களில் அதிக படங்களில் நடித்திருந்தார் விஜயகாந்த். இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே அதிக படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஹிட் கொடுக்க வேண்டும் என்று ரஜினி மற்றும் கமலை தேடி பல இயக்குனர்கள் செல்ல, சிறு இயக்குனர்கள் பலருக்கும் வாய்ப்புக்கொடுத்து வெற்றிப் படங்களில் நடித்தார் விஜயகாந்த். இப்படி 80களில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தது. மிஸ்டர் பாரத், நான் அடிமை இல்லை, விடுதலை, மாவீரன் என ரஜினியின் படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தன. இதில் மிஸ்டர் பாரத் படம் மட்டும் ஓரளவு தப்பித்தாலும், அது வெற்றிப்படமாக கருதப்படவில்லை.
மறுபுறம் விஜய்காந்த் அதே காலக்கட்டத்தில் நடித்த நானே ராஜா நானே மந்திரி, நீதியின் மறுபக்கம், அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார். குறிப்பாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது.
இதனால் அப்போது பல பத்திரிகைகளும் விஜய்காந்த் தான் சூப்பர் ஸ்டார் என்று எழுதத்தொடங்கின.. விஜயகாந்தை சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டு சிறப்பு கட்டுரைகளை எழுதத் தொடங்கினர். அது மட்டுமே ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என எந்த முன்னணி நடிகர்களின் 100-வது படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் விஜயகாந்த் மட்டும் அதற்கு விதிவிலக்கு. விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் வெள்ளி விழா கண்டு சாதனை படைத்தது. மேலும் 90களின் சின்னக்கவுண்டர், மாநகர காவல் என பல மெகா ஹிட் படங்களை கொடுத்தார்.
தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த விஜயகாந்த் பின்னர் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டார். உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றிகளை சுவைத்த அவர் 2011-ல் எதிர்க்கட்சி தலைவரானார். எனினும் அவரின் அரசியல் செல்வாக்கும் குறைய தொடங்கியது. கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜய்காந்த் இன்று காலமானார். விஜயகாந்தின் உயிர் இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும், திரைத்துறையில் அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேமும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.