விஜயகாந்த் மறைவு.... தமிழ்நாட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

By Ganesh A  |  First Published Dec 28, 2023, 9:39 AM IST

அரசியல்வாதியும், நடிகருமான விஜயகாந்த் இன்று காலமான நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் இன்று காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


நடிகரும், தேமுதிக கட்சி நிறுவனருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி இருந்தார். அண்மையில் கூட இவருக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரே குணமடைந்து வீடு திரும்பினார்.

இதனிடையே நேற்று விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வந்திருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால் நேற்று இரவு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Latest Videos

undefined

ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் இன்று அதிகாலை விஜயகாந்த் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி அறிந்ததும் ரசிகர்களும் அவரது தொண்டர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். விஜயகாந்தின் உடன் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது திருமண மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், விஜயகாந்த் மறைவையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இன்று காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசியலைப் போல் சினிமாவிலும் பல வியத்தகு சாதனைகளை படைத்துள்ள விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த முடிவை திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் கேப்டன்... அரசியலில் கருப்பு எம்ஜிஆர் - சோதனைகளை கடந்து விஜயகாந்த் சாதனை நாயகனாக உருவெடுத்த கதை!

click me!