
தனது 30 ஆண்டுகால திரை வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை படைத்த ஒரு ஒப்பற்ற கலைஞனாக விளங்குகிறார் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல. பல திரைப்படங்களில் நடிகராக நடித்து வந்த விஜயகாந்த் வல்லரசு, நரசிம்மா, தென்னவன் மற்றும் எங்கள் அண்ணா உள்ளிட்ட எட்டு திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டு இருக்கிறார்.
2010 ஆம் ஆண்டு வெளியான "விருதகிரி" என்கின்ற திரைப்படத்தை இயக்கியதும் அவர்தான். கலை மேல் தீராத தாகம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் வந்த பிறகுதான் நடிகர் சங்கம் மிக மிகப் பெரிய வளர்ச்சிகளை பெற்றது என்றே கூறலாம். வெளிநாடுகளுக்கு சென்று தமிழ் திரைப்பட நடிகர்கள் அதிக அளவில் நிகழ்சகளை நடத்தியதும் இவர் தலைமையில் தான்.
20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்து ஒரு தனி சாதனையை படைத்த மனிதன் அவர். இன்று வைகைப்புயல் வடிவேலு அவர்கள் மிகப்பெரிய உச்சத்தில் இருக்க முக்கிய காரணமாக திகழ்ந்தவரும் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 1986 ஆம் ஆண்டு வெளியான "மனக்கணக்கு" என்கின்ற திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.
விஜயகாந்த் மறைவு.... தமிழ்நாட்டு திரையரங்குகளில் காட்சிகள் ரத்து
இந்த ஒரே ஒரு திரைப்படத்தில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் விஜயகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த 1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் மற்றும் நளினி நடிப்பில் வெளியான "அன்னை பூமி" என்கின்ற திரைப்படம் தான் தமிழ் திரை உலகில் முதல் முதலில் 3d தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பது பலர் அறிந்திடாத ஒரு உண்மை.
தமிழ் திரை உலகுக்கு பல ஒப்பற்ற விஷயங்களை செய்துள்ள கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கலைமாமணி மற்றும் கௌரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு விருதுகளை வென்ற ஒரு மாமனிதர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.