Bharathi kannamma : கொடூரமாக யோசிக்கும் வெண்பா தூக்கு மாட்டி கொள்வது போன்ற காட்சியமைக்கப்படவுள்ளது.. ஏற்கனவே கண்ணம்மா தனக்கு துரோகம் பண்ணி விட்டதாக எண்ணி கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கும் பாரதி வெண்பாவின் இந்த செயலால் வெண்பா பக்கம் மீண்டும் திரும்பலாம் என தெரிகிறது...
விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் பாரதி கண்ணம்மா தனி இடம் பிடித்துள்ளது. மீம்ஸ் கிரியேட்டர்களால் ட்விட்டர் ட்ரெண்டிங்கையே தெறிக்கவிடும் அளவிற்கு பிரபலமான சீரியல் ‘பாரதி கண்ணம்மா’ தொடராக மட்டுமே இருக்க முடியும். விஜய் டி.வி. டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் டாப்பில் உள்ளது.
இதில் ஹீரோயின் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி ஹரிபிரியனுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டோ, அதே அளவிற்கு வில்லி வெண்பாகவாக நடித்து வரும் பரீனாவிற்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பரீனா, சீரியல் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு கூட சளைக்காமல் பதில் கொடுத்து வருபவர்.
இதற்கிடையே வெண்பாவாக வந்த பரினா கர்ப்பமாக இருந்தார். அவரது வலை காப்பு வீடியோ சமூக வலைதளத்தில் பெரும்பாலனோர் பார்த்திருந்தனர். இதை தொடர்ந்து நிறை மாத கர்ப்பிணியான பரினா நீருக்கடியில் எடுத்திருந்த போட்டோ ஷுட் அனைவரின் கவனத்தையம் ஈர்த்திருந்தது. வயிற்றில் குழந்தையுடன் தொடர்ந்து பரினா பாரதி கண்ணம்மாவில் நடித்து வந்தார். பிரசவ காலம் நெருங்கியதை ஒட்டி வெண்பா சிறையிலேயே இருப்பது போகின்ற கட்சியை படமாக்கி விட்டு பரினா சிரியலிருந்து சிறுது காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தார். ஒரே சமயத்தில் (கண்ணம்மா) ரோஷினி, (வெண்பா) பரினா இருவரும் நாடகத்தை விட்டு விலகியது ரசிகர்ளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.
undefined
பின்னர் பரினாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சிறிது காலம் ஓய்வில் இருந்த பிறகு மீண்டும் பாரதிகண்ணம்மா சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். அவ்வாறு என்ட்ரி கொடுத்த வெண்பா சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்ததாக கட்டப்பட்டது.. ஆனால் அஞ்சலிக்கு தவறான மருந்துகளை பரிந்துரைத்தால் வெண்பாவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாரதி வெண்பாவை புறக்கணித்து வருகிறார்..
இதன் காரணமாக கொடூரமாக யோசிக்கும் வெண்பா தூக்கு மாட்டி கொள்வது போன்ற காட்சியமைக்கப்படவுள்ளது.. ஏற்கனவே கண்ணம்மா தனக்கு துரோகம் பண்ணி விட்டதாக எண்ணி கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கும் பாரதி வெண்பாவின் இந்த செயலால் வெண்பா பக்கம் மீண்டும் திரும்பலாம் என தெரிகிறது...