Priyanka Chopra got baby : வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா..அவரே சொன்ன ஹாபி நியூஸ்..

Kanmani P   | Asianet News
Published : Jan 22, 2022, 10:28 AM IST
Priyanka Chopra got baby : வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பிரியங்கா சோப்ரா..அவரே சொன்ன ஹாபி நியூஸ்..

சுருக்கம்

Priyanka Chopra got baby :  சமீபத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா..அவரது இன்ஸ்ட்டா பதிவில் வாடகை தாய் மூலம் தாங்கள் பெற்றோர்கள் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்...

பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. நடிகர் ஷாருக்கான், இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் மற்றும் அவரது சகோதரர், நடிகை பிரீத்தி ஜிந்தா என வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்ட பாலிவுட் பிரபலங்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அந்த வரிசையில் பிரியங்கா சோப்ராவும் இணைந்துள்ளார்.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் வரை நடித்து வரும் பிரியங்கா சோப்ரா. தன்னுடைய 38 வயதிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு திருமணத்திற்கு பிறகும் கூட சரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா, தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். 

திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காத பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி  உடையில் தோன்றி மிரள வைக்கிறார். அதனால் தானோ என்னவோ பிரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 65 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அதன் மூலமாக பிரியங்கா சோப்ரா ஒரு போஸ்ட்டுக்கு பல கோடி பணத்தை அள்ளி வருகிறார்.

மேலும் மற்ற நடிகைகளை விட மிகவும் தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு வெளிக்காட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா  வித்தியாசமான புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா..அவரது இன்ஸ்ட்டா பதிவில் வாடகை தாய் மூலம் தாங்கள் பெற்றோர்கள் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒரே ஆண்டில் 2 தோல்விகள் கொடுத்த பிரபாஸ்!
மதுரையில் இருந்து சிம்புவின் அரசன் மாநாட்டை தொடங்கும் வெற்றிமாறன்: எப்போது ஸ்டார்ட் தெரியுமா?