
கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் நான்காவது கட்டமாக ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் உள்ளது. எனவே பிரபலங்கள் எங்கும் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிலேயே அவர்களுக்கு பிடித்த வேலைகளை செய்து வருகிறார்கள். அதே போல் ரசிகர்களை கவரும் விதத்தில், சூப்பர் ஹிட் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அதன் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தமிழ், தெலுங்கு. கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை வேதிகா, பலரும் தளபதியின் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு டான்ஸ் ஆடி, வீடியோ வெளியிட்டு வரும் நிலையில், அந்த பாடலை ஓரம் கட்டிவிட்டு, 'குட்டி ஸ்டோரி' பாடலுக்கு கியூட் ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் நடிகை வேதிகா, தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில்... குட்டை உடையில் கவர்ச்சிகரமாக போட்ட ஆட்டமே இதுவரை ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத நிலையில், இதை தொடர்ந்து தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த குட்டி ஸ்டோரி பாடலும் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, 'மதராசி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை வேதிகா. ' முனி',' காளை', 'காஞ்சனா', உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
தமிழ் மொழியை விட மற்ற மொழிகளில் வெளியான படங்கள் தொடந்து வெற்றி பெற்றதால், முன்னணி நடிகையாக மாறினார். கடைசியாக தமிழில் இவர் கடந்த ஆண்டு ராகவா லாரன்சுடன் நடித்த 'காஞ்சனா 3 ' திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது 'விநோதன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதிகாவின் குட்டி ஸ்டோரி வெர்ஷன் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.