லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து நயன்தாரா நடித்து முடித்துவிட்டார். அந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதையடுத்து அவள் பட இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் நெற்றிக்கண்.“பிளைன்ட்” என்ற கொரியன் படத்தின் ரீமேக்கான அதில் நயன்தாரா, கண்பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார்.காதலி நயன்தாராவிற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். இதற்கு முன்பு தனது தங்கத்திற்காக பாடலாசிரியர் அவதாரம் எடுத்திருந்த விக்கி, இந்த முறை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. கைவிலங்கு, ரத்தக்கறை, பிரெய்லி எழுத்துக்கள் என மிரட்டலான போஸ்டரை பார்த்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதனிடையே பணப்பிரச்சனை காரணமாக படம் பாதியில் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நயன்தாரா ரசிகர்கள் வயிற்றில் பால்வார்கும் விதமாக சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக நெற்றிக்கண் படத்தின் 65 சதவீத படப்பிடிப்புகள் வெற்றிகரமாக முடிவடைந்துவிட்டதாம். இதுவரை ரசிகர்கள் பார்த்திராத நயன்தாராவை இந்த படத்தில் பார்க்கப் போவதாக எடிட்டர் லாரன்ஸ் தெரிவித்துள்ளது. படத்தில் ஆக்ஷன் மற்றும் திரில்லருக்கு குறைவே இருக்காது என்றும், நயன்தாரா நடித்துள்ள ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் மிரள போகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?
லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க உள்ளார். இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார், விஜய்யின் பிகில் படங்களை மிகவும் எதிர்பார்த்தார் நயன்தாரா. அந்த படத்தில் தனக்கு சொல்லிக் கொள்ளும் படி பெரிதாக கேரக்டர் அமையவில்லை. அதனால் அடுத்தடுத்து காதலர் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்துள்ள நயன்தாரா கோலிவுட்டையே மிரள வைக்கும் அளவிற்கு மிரட்டலான படங்களை இறங்க திட்டமிட்டுள்ளாராம்.