வாரிசு படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடிகர் விஜய் தீபாவளி கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் , தற்போது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, சம்யுக்தா, சங்கீதா, ஷியாம், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.
வாரிசு திரைப்படம் வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது நடிகர் விஜய் தீபாவளி கொண்டாடுவதற்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். அதன்படி அவர் துபாயில் தீபாவளியை கொண்டாட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சர்தார் வசூல்ல பாதி கூட இல்ல... இரண்டாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பிரின்ஸ்
இன்று காலை துபாய் செல்வதற்காக அவர் விமான நிலையம் வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றன. பிஸ்கட் நிற பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் முகத்தில் கருப்பு மாஸ்க் என சிம்பிளாக வந்த நடிகர் விஜய்யின் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
தீபாவளி கொண்டாட்டத்துக்கு பின் சில நாட்கள் துபாயில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்பும் விஜய், அதன்பின் வாரிசு படத்தின் எஞ்சியுள்ள ஷூட்டிங்கை முடித்துவிட்டு, டிசம்பர் மாதம் முதல் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் pic.twitter.com/FyDyCD60kX
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்... பாதியில் விலகிய ஜிபி முத்து... அவருக்கு பதில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?