தனுஷை தொடர்ந்து.. புதிய வீடு கட்டும் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா! வைரலாகும் வீடியோ..!

By manimegalai a  |  First Published Oct 22, 2022, 9:50 PM IST

நடிகர் தனுஷ் பல கோடி செலவு செய்து, போயஸ் தோட்டத்தில் பிரமாண்ட வீடு ஒன்றை கட்டிவரும் நிலையில், இவரை தொடர்ந்து ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தும் புதிய வீடு ஒன்றை கட்ட பூமி பூஜை செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
 


கோலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருடைய இரு மகள்களும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எது செய்தாலும் அது மிகவும் வைரலாகி விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தான் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், மகன் பிறந்த அதிர்ஷ்டம் புதிய வீடு கட்ட பூமி பூஜை நடத்தியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்த பூஜையில், ரஜினிகாந்தும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடு ஈசிஆர்-ல் கட்டப்பட உள்ளது. மிக பிரமாண்டமாக இந்த வீட்டை சௌந்தர்யா மற்றும் விசாகன் கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் மூத்த மகளான, ஐஸ்வர்ய, தனுஷை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ள நிலையில், சமீபத்தில் இருவருக்கும் இடையே நடத்த பட்ட பேச்சுவார்த்தையில், இருவரும் மீண்டும் பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் செய்திகள்: முடிவெடுக்கும் தருணத்தில் ஜி.பி.முத்து...! கண்ணீருடன் கமல்ஹாசன் முன் ஆஜரான தருணம்..! வீடியோ
 

மேலும் தனுஷ் விவாகரத்துக்கு முன்னரே... போயஸ் தோட்டத்தில் பல இடம் ஒன்றை வாங்கி, பல கோடி மதிப்பில் ஹை டெக் முறையில், பிரமாண்ட வீடு ஒன்றை தனுஷ் கட்டி வருகிறார். இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்னும் சில பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த அனைத்து பணிகளும் முடிந்து, ஐஸ்வர்யாவுடன்.. தனுஷ் குடியேறுவாரா? என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்: அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் படத்திற்கு படு மாஸ் டைட்டில்!

எனினும், விவாகரத்து குறித்து வெளிப்படையாக அறிவித்த இந்த ஜோடி, மீண்டும் சேர்ந்து வாழ உள்ளதாக அறிவித்த பின்னரே... இந்த தகவல் உறுதியாகும்.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajinii Guru (@guruurajini)

 

click me!