varalaxmi sarathkumar yoga : அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..தலைகீழாய் யோக போஸ்...

Kanmani P   | Asianet News
Published : Feb 21, 2022, 02:50 PM IST
varalaxmi sarathkumar yoga : அட..வரலட்சுமியா இது?..சிக்கென இளைத்து..தலைகீழாய் யோக போஸ்...

சுருக்கம்

varalaxmi sarathkumar yoga : வரலட்சுமி சரத்குமார் தற்போது தலைகீழாய் யோகா செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ளார்.. உடல் எடையை குறைத்து சிக்கென மாறிய வருவுக்கு ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்...

தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். 

இவரின்  ஹைட்,வெயிட் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலுக்கு ஒத்துப்போவதாகவே இருந்து வருகிறது...வரலட்சுமி தற்போது..நந்தா பாலகிருஷ்ணா தனது 107 வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளதாகவும், தமன் இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் NBK107 இயக்குனர் Gopichandh Malineni இந்த படத்தில் வரலட்சுமியும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அதோடு சமந்தாவின் சாகுந்தலம் படத்திலும் இணைந்துள்ளார்...இது தொடர்பாக வரலட்சுமி - சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட செல்பீ வைரலானது..

இதற்கிடையே வரலக்ஷ்மி சரத்குமார் அடிக்கடி தனது சமூக ஊடக கணக்கில் தனது உடற்பயிற்சிக்கான பயணத்தைப் பகிர்ந்து கொள்வார். கூடைப்பந்து விளையாடுவது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது அல்லது வீட்டில் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பகிர்ந்து  - வரலக்ஷ்மி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிக்கிறார். 

சில வாரங்களுக்கு முன்பு ​​நடிகை முதன்முறையாக ஏரியல் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார். ஒரு இன்ஸ்டாகிராம் ரீலில், வரலக்ஷ்மி தொட்டில் யோகாவை மேற்கொண்ட  தனது பயணத்தைப் பகிர்ந்துள்ளார். "முதல் முறையாக #ஏரியல்யோகாவை முயற்சிக்கிறேன்..!!! என குறிப்பிட்டிருந்தார்..

இந்நிலையில் இன்று வரலட்சுமி பகிர்ந்த வீடியோவில் தலைகீழாய் யோக செய்கிறார் வரலட்சுமி..உடல் எடையை சற்று குறைத்து தட்டையான வயிற்றுடன் வருவின் வீடியோ ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளது...

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்