
சிகரெட், மதுவை போல என்னதான் சினிமா ஒரு கேடான விஷயம் என்றாலும் கூட அதனால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, அப்டேடட் நாகரிகத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக சினிமா விளங்குவதால், அதைப் பார்த்து தங்களையும் ஸ்டைலாக்கி கொள்வது மக்களின் வழக்கம். ரஜினியின் தலைமுடி ஸ்டைலைப் பார்த்துதான் பலருக்கு கேசத்தின் மீது நேசம் பிறந்தது. கமலின் கட்டுமஸ்தான உடம்பை பார்த்துதான் பலர் தங்கள் உடம்பையும் பேண துவங்கினர்.
ரஜினி ஒரு வயதுக்கு மேல் பொதுவெளியில் தன் லுக்கை பற்றி கவலைப்படாமல் போனார். ஆனால் கமல்ஹாசன் இன்றளவும், இந்த வயதிலும் தனது தேகத்தையும், தோற்றத்தையும் செம்மையாக மெயின்டெயின் செய்கிறார். அவரைப்பார்த்து பல இளைஞர்கள் உடலை பராமரிக்கிறார்கள்.
ரஜினி, கமலுக்கு அடுத்து அந்த முக்கிய இடங்களைப் பிடித்தவர்கள் இருவர். அவர்கள் விஜய் மற்றும் அஜித். இருவரும் சில வருடங்கள் இளமை துள்ளலுடன் தான் இருந்தனர். ஆனால் மங்காத்தா பட சமயத்தில் இருந்து அஜித் தன் தலைமுடி நரைத்ததை பற்றி கவலைப்படாமல் நடிக்கவும் செய்தார், வெளியே வரவும் செய்தார். அதற்கு முன்பிருந்தே கடுக்கோப்பாக உடலை வைக்காமல், அதை பெருக்க விட்டார். விவேகம் படத்துக்காக இரும்பாக உடலை இறுக்கியவர் பின் மீண்டும் அதை விஸ்வாசத்திலும், நேர்கொண்ட பார்வையிலும் தொலைத்தார். இப்போது வலிமையிலும் சொல்லிக்கொள்ளும் படி அவர் ஃபிட்டாக இல்லை! என்பதே உண்மை. ஆக பழைய ஈர்ப்பில்தான் இன்னமும் அவரை ரசிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.
ஆனால் விஜய்யோ இப்படியில்லாமல் தன்னை சினிமாவிலும், பொது வெளியிலும் பக்காவாக மெயின் டெயின் செய்தார். ஆனால் சர்க்கார் படத்திலிருந்து நரைத்த தாடியுடன் தலைகாட்ட துவங்கியவர் பிகிலின் சீனியர் கதாபாத்திரத்திலும் அதை தொடர்ந்தார். மாஸ்டரில் கம்பேக் போனவர், பின் இப்போது பீஸ்ட்டில் நரைத்த தாடி, சற்றே நரைத்த முடி என்று தோற்றம் தருகிறார்.
விஜய் முன்பெல்லாம் சினிமாவிலும், பொது வெளியிலும் தன் தோற்ற இமேஜை கவனமாக மேனேஜ் செய்வார். ஆனால் பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கும் நிலையில், வீட்டில் இருப்பவர் தலைக்கு டை இல்லாமல், அதிகமாக நரைத்த தாடி பற்றி கவலையில்லாமல் இருக்கிறார். அதே தோற்றத்தோடே வெளியிலும் வருகிறார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட மிக சாதாரணமான லுக்கில், நரைத்த தலை மற்றும் தாடியுடன் விஜய்யை பார்த்து ரசிகர்கள் வழக்கமான உற்சாகத்தில் குரல் கொடுத்தாலும், திரும்பிச் செல்கையில் ‘ஏன் தளபதி டல்லா இருக்கார்?’ என்கிறார்கள். ஹீரோக்கள் பொது வெளியில் போலியாக இல்லாமல் யதார்த்தமாக இருப்பது நல்லதுதான். ஆனால் எம்.ஜி.ஆர்., கமல், சரத் போல் உடம்பை பேணும் நல்ல குணங்களை வளப்பர்தில் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டாக அவர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
டியர் ஹீரோஸ், இதையும் கொஞ்சம் கவனியுங்க!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.