
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் (Nelson) இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் (Beast). விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
ஏற்கனவே நெல்சன் இயக்கிய 2 படங்களுக்கும் இசையமைத்த அனிருத் (Anirudh), தற்போது 3-வது முறையாக அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் சிவகார்த்திகேயனின் பாடல் வரிகள் நிச்சயம் இருக்கும். அந்தவகையில், பீஸ்ட் (Beast) படத்திற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.
சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய அரபிக் குத்து (Arabic kuthu) பாடல் வெளியானது முதலே, பலரது வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகளில் 'ஹலமதி ஹபிபு' தான் பரவலாக ஒலித்து கொண்டிருக்கிறது. இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.
பொதுவாக ஒரு பாடல் டிரெண்டானாலே அதனை பலரும் ரீல்ஸ் செய்ய தொடங்கிவிடுவார்கள். அப்படி இருக்கையில் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய 'அரபிக்குத்து' (Arabic kuthu) பாடலை மட்டும் சும்மாவா விடுவார்களா என்ன. ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நடிகையும், பிரபல தொகுப்பாளினியுமான டிடி என்கிற திவ்யதர்ஷினி அரபிக் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுல என்ன ஸ்பெஷல்னா அவர் இந்த டான்ஸ் ஆடியது அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் தான். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... vijay car :இன்சூரன்ஸ் இல்லாத காரில் வந்து ஓட்டு போட்டாரா விஜய்? - போட்டோவை வைத்து வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.