Varalaxmi Nicholai : புது மனைவியை பத்திரமாக அழைத்து சென்ற வரலட்சுமி கணவர் நிக்கோலாய்.. வைரல் வீடியோ..

Published : Jul 15, 2024, 04:03 PM ISTUpdated : Jul 15, 2024, 04:14 PM IST
Varalaxmi Nicholai : புது மனைவியை பத்திரமாக அழைத்து சென்ற வரலட்சுமி கணவர் நிக்கோலாய்.. வைரல் வீடியோ..

சுருக்கம்

திருமணத்திற்கு பின் முதன்முறையாக வரலட்சுமி தனது கணவர் நிக்கோலாய் மற்றும் தந்தை சரத்குமார் ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

விக்னேஷ் சிவன் தமிழில் இயக்குனராக அறிமுகமான போடா போடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்திற்கு முன்னரே ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் நடிக்க வரலட்சுமியை தான் அணுகினார் ஷங்கர். ஆனால் சரத்குமார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் அந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. அதன்பின்னரே அவர் தமிழில் நடிக்க தொடங்கினார். முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பின் மூலம் வரலட்சுமி நல்ல பெயர் கிடைத்தாலும், அவருக்கு தமிழில் அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதன் மூலம் தென்னிந்தியா சினிமாவில் முக்கியமான நடிகையாக அவர் மாறினார். திடீரென நெகட்டிவ் ரோலில் நடிக்க தொடங்கிய அவர் பின்னர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹனுமான் படத்தில் வரலட்சுமி நடித்திருந்தார். தற்போது தனுஷின் ராயன் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என் காதல் அவர்... ஆனால் உயிர் இது தான்! திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கா? வரலட்சுமி கூறிய பதில்!

இதனிடையே தனது சிறு வயது நண்பரான நிக்கோலாய் சச்தேவை காதலிப்பதாக வரலட்சுமி அறிவித்தார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிக்கோலாய் மும்பையில் ஒரு ஆர்ட் கேலரியை நடத்தி வருகிறார்.மும்பையில் செல்வாக்கு பெற்ற நபராக இருக்கும் அவருக்கு பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்களுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது. அவருக்கு 16 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்.

வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடிக்கு சமீபட்த்ஹில் தான் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடந்த நிலையில் தாய்லாந்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. சென்னையில் நடந்த திருமண வரவேற்பில் திரைப்பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து தாய்லாந்தில் நடந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். வரலட்சுமி திருமண வரவேற்பு, திருமணம் தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

அந்த ஹீரோவால் நயன்தாரா - த்ரிஷா இடையே ஏற்பட்ட பிரச்சனை.. இதுக்காகவா பல ஆண்டுகள் பேசாம இருந்தாங்க?

இந்த நிலையில் திருமணத்திற்கு பின் முதன்முறையாக வரலட்சுமி தனது கணவர் நிக்கோலாய் மற்றும் தந்தை சரத்குமார் ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது மனைவி வரலட்சுமியை கணவர் நிக்கோலாய் கண்ணும் கருத்துமாக பத்திரமாக அழைத்து வந்தார் இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் வரலட்சுமி - நிக்கோலாய் தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?