- Home
- Gallery
- என் காதல் அவர்... ஆனால் உயிர் இது தான்! திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கா? வரலட்சுமி கூறிய பதில்!
என் காதல் அவர்... ஆனால் உயிர் இது தான்! திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கா? வரலட்சுமி கூறிய பதில்!
நடிகை வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் நடந்து முடிந்த பின்னர், சரத்குமார் இன்று தன்னுடைய மகள் மற்றும் மருமகனுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்கிற அவரின் காதலருக்கு, ஜூலை 3-ஆம் தேதி, தாலாந்தில் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதை தொடர்ந்து நடந்த திருமண வரவேற்பில், கோலிவுட் திரையுலகை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையேடு, கணவரும் ஹனி மூன் சென்ற வரு... தன்னுடைய தந்தை மற்றும் கணவருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நிகழ்ச்சி துவங்கிய பின்னர் செய்தியாளர்கள் முன்பு பேசிய வரலட்சுமி கணவர் நிக்கோலாய் சச்தேவ், "எனக்கு தமிழ் மிகவும் குறைவாக தான் தெரியும். சாப்பாடு, தண்ணீர் மற்றும் பொண்டாட்டி போன்ற வார்த்தைகளை தான் கற்று வைத்துள்ளேன். இன்னும் சில மாதங்களில், தமிழ் பேச கற்றுக்கொள்கிறேன். மும்பை எப்படியோ அப்படி தான் இனி சென்னையும் எனக்கு. நீங்களும் என் மக்கள் தான்.
Varalaxmi weds Sachdev
முதலில் என்னை பற்றி சொல்ல நினைக்கிறன். என் பெயர் நிக்கோலாய் சச்தேவ். இந்த அழகிய பெண்ணான வரலட்சுமியின் கணவர். என் மனைவி திருமணத்திற்கு அவரின் மரபு வழி பெயரான வரலட்சுமி சரத்குமார் என்பதை மாற்ற தேவையில்லை. அவர் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதை சேர்த்து கொள்வதே சிறந்தது என நினைக்கிறன். என் மனைவியின் கனவுகளுக்கு எப்போதுமே நான் துணை நிற்க நினைக்கிறன். என்னை பொறுத்தவரை நான், என் மனைவியின் முதல் காதல் இல்லை. அவருக்கு எப்போதுமே சினிமா தான் முதல் காதலாக இருந்துள்ளது. எனவே அவர் தொடர்ந்து நடிப்பார் என தெரிவித்தார். அவருக்கு அவரின் அப்பா சரத்குமார் மற்றும் என்னுடைய பக்கத்தில் இருந்தும் 100 சதவீத ஒத்துழைப்பு கொடுக்கப்படும். வரலட்சுமிக்கு நீங்களும் வேற லெவல் லெவலுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என தெரிவித்துள்ளார்.
கணவரை தொடர்ந்து செய்தியாளர்கள் முன் பேசிய வரலட்சுமி, அனைவருக்கும் நன்றி. அப்பா கூட சொல்லி இருந்தாங்க கல்யாணத்துக்கு அப்பறம் உங்களை சந்திக்கிறோம் என்று, அப்போ வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது. உங்களை சந்திக்க தான் இங்கு வந்துள்ளோம். அவர் சொன்னது போல் என்னுடைய காதல் வந்து என் கணவர், ஆனால் உயிர்... சினிமா என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். அதே போல் நிறைய பேர் திருமணத்திற்கு பின்னர் நடிப்பீர்களா? என என்னிடம் கேட்டனர். உங்களுக்கு அவரிடம் இருந்தே பதில் வந்து விட்டது. கண்டிப்பாக நான் திருமணத்திற்கு பின்னர் நடிப்பேன் என கூறினார்.
இந்த சந்திப்புக்கு பின்னர், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 போன்ற உணவுகள் பரிமாறப்பட்ட நிலையில், எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் நிக்கோலாய் பத்திரிகையாளர்களுக்கு உணவு பரிமாறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.